”முஸ்லிம் இலக்கியப் பிரகடனம்” சம்பந்தமான கூட்டம்

“முஸ்லிம் இலக்கியப் பிரகடனம் எனும் தொனிப் பொருளிலான ஒன்று கூடல் நேற்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது. இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என பலர் இந்த  ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.
ஒன்று கூடலில் கலந்துகொண்டோர் முஸ்லிம் இலக்கியத்தின் தேவைப்பாடு பற்றி பல்வேறு கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அடுத்துவரும் ஒன்றுகூடல்கள் வவுனியா, கிண்ணியா மற்றும் வெலிகமவில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் சேகு தாவூத், நவாஸ் சௌபி, கலைமகன் பைரூஸ், சுஐப் எம். காஸிம், எம்.சீ. நஜிமுதீன், தினக்குரல் நிலாம், முல்லை முஸ்ரிபா, மபாஹிர் மௌலானா, அஷ்ரப் . அஸீஸ், அல்ஹாஜ் மக்கீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர் சேகுதாவுத் - நாம் கடந்த காலத்தில் கிழக்கில் முஸ்லிம் தேசத்தை பிரகடனப்படுத்தினோம்.
ஆனால் அதன் செயற்பாடு  நடைபெறவில்லை அவ்வாறில்லாமல் இந்த முஸ்லிம் இலக்கிய பிரகடனத்தை  கிழக்கில் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டு கொழும்பில் மாநாட்டை நடத்துதல் வேண்டும். அதற்காக கிழக்கு வடக்கு தெற்கு முஸ்லிம் இலக்கியவாதிகள் எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும்.
பிரகடனப்படுத்தப்பட்டபோது அதன் மூலம் நாம் விவாதங்கள்விமர்சனங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்படல் வேண்டும். தற்கால சோசியல் மீடியாக்கள் மூலம் முஸ்லிம் இலக்கியவாதிகளிடம் இந்த  பிரகடனம் சென்றடைய வேண்டும்   என தெரிவித்தார்.

 படங்கள்: (அஸ்ரப் சமத்)


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top