இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா - தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
13-வது சட்டத்திருத்தத்தை
அமுல்படுத்த
இலங்கைக்கு நெருக்கடி தர கோரிக்கை
இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜை தமிழ் எம்.பி.க்கள்
சந்தித்தனர். சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழ்
தேசிய கூட்டமைப்பினர்
டில்லியில் அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச்சு
நடத்தினர். இலங்கை அரசியல் சட்ட 13வது
திருத்தத்தை செயல்படுத்துமாறு மக்கள் கோரிக்கைவிடுப்பதாக அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்
சுஷ்மாவிடம் கூறினர்.
இதனால்
13-வது சட்டத்திருத்தத்தை
அமுல்படுத்த இலங்கைக்கு, இந்திய அரசு நெருக்கடி
தருமாறும் அவர்கள்
அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ்ஜிடம் கோரிக்கைவிடுத்தனர். இலங்கை
அரசியல் நிலவரம்
குறித்தும் சுஷ்மாவுடன், இலங்கை தமிழ் எம்.பி.க்கள்
ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடியை
சந்திக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்
திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.