குர்திஷ் படைகளை
தோற்கடித்து
ஈராக்கின்
மிகப்பெரிய அணையை கைப்பற்றினர்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
ஈராக்கில் குர்திஷ் படையினருடன் கடும் சண்டையிட்டு, மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர்.
ஈராக்கில் ஷியா
முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வந்தனர். கடந்த ஜூன் மாதம்
அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரைப்பிடித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கை ஓங்கியது. மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள
பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத்தையும் பிடிக்கப்போவதாக மிரட்டி வந்தனர். ஆனால் அந்த நகருக்கு 100 கி.மீ. தொலைவிலேயே படையை நிறுத்திக்கொண்டு விட்டனர்.
அதே நேரத்தில், எண்ணெய் வயல்களுக்கு அருகேயுள்ள நகரங்கள் மீது அவர்கள் குறிவைத்தனர். சிரியா எல்லையில் உள்ள நகரங்கள் மீதும் கண் வைத்தனர். அந்தப் பகுதி கிராமங்களில் வாழுகிற மக்களிடம் தாங்கள் தாக்குதல் நடத்தப்போவதை சொல்லி, அவர்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேற வைத்தனர். இந்த
நிலையில் வடக்கு ஈராக்
நகரான ஜூமார் நகரை
பிடிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டனர். இந்த நகரம் குர்திஷ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்
இருந்து வந்தது.
கடந்த சனிக்கிழமையன்று குர்திஷ் படைகளை எதிர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கடும்
சண்டையிட்டனர். முடிவில் அந்த
நகரைக் கைப்பற்றி விட்டனர். அதன் சுற்றுப்புற கிராமங்களும் போராளிகள் வசம் வந்து
விட்டன. மேலும் ஜூமார் நகரையொட்டி அமைந்திருந்த எண்ணெய் வயலையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றி விட்டனர். மேலும், இரண்டு நகர் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர். இதில் ஏராளமான குர்திஷ் படையினர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் தங்களது வாகனங்களையும், ஆயுதங்களையும் கைவிட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளெல்லாம் நமது சகோதரர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து விட்டன’’ என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈராக்கில் குர்திஷ் படையினருடன் கடும்
சண்டையிட்டு, மொசூல் அணையை
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஈராக்கில் போராளிகள் ஒன்றன்பின் ஒன்றாக 2 நகரங்களை பிடித்தனர். இதன் காரணமாக பிரதமர் நூரி அல்
மாலிக்கியின் பிடி தளர்கிறது.
0 comments:
Post a Comment