காஸா முனை
பகுதியில் இருந்து
இராணுவம் வெளியேறும்
- இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில்
போர் நிறுத்தம்
தொடர்பான எகிப்து
முன்வைத்த திட்டத்தை
இஸ்ரேல் ஏற்றுக்
கொண்டது. இந்நிலையில்
காஸாவில் இருந்து
இராணுவத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல்
அறிவித்துள்ளது.
இதுவரையில்
கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை
1,800 ஐ தாண்டியது.
இந்நிலையில் எகிப்து முன்வைத்த போர்நிறுத்த திட்டத்தை
ஏற்றுக் கொண்ட
இஸ்ரேல் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு
சம்மதம் தெரிவித்தது.
ஹமாஸ் இயக்கமும்
சம்மதம் தெரிவித்தது.
இன்று காலை 8 மணி முதல் அங்கு இந்த
போர்நிறுத்தம் அமுலுக்கு வருகிறது. போர் நிறுத்த
உடன்பாட்டுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம்
மதிப்பளிக்க வேண்டும் என்று எகிப்து கேட்டுக்
கொண்டுள்ளது. மேலும், எகிப்து தலைநகர் கெய்ரோவில்,
இஸ்ரேல்-காஸா
முனை இடையே
நிரந்தர சண்டை
நிறுத்தம் செய்வதற்கான
முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களுக்குள்
அமைதிப் பேச்சுக்கான
முயற்சியை எகிப்து
மேற்கொள்ளும் என கூறப்பட்டது.
இந்நிலையில்
இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும் எகிப்து அறிவித்த
போர் நிறுத்தம்
அமுலுக்கு வரும்
நிலையில் காஸா
முனை பகுதியில்
இருந்து இராணுவம்
வெளியேறும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவில்
தற்போது இஸ்ரேல்
இராணுவம் உள்ள
நிலையில் இருந்து
வெளியேறும். காஸாவிற்கு வெளியே தற்காப்பு நிலைகளில்
இஸ்ரேல் இராணுவம்
நிறுத்தப்படும். என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment