அமெரிக்கா
ஹிரோஷிமா மீது
முதல் அணுகுண்டு
வீசிய தினம் இன்றாகும்
ஜப்பானில்
உள்ள ஒரு
பெருநகரம் ஹிரோஷிமா ஆகும். இது
ஹோன்ஷூ தீவில்
உள்ளது. இந்நகரத்தின்
மீது இரண்டாம்
உலகப்போரின் போது முதன் முதலில், ஆகஸ்ட் 6 ஆம்
நாளன்று அணுகுண்டு
வீசப்பட்டது. இரண்டாம்
உலகப் போரின்போது,
அமெரிக்கா இந்த
நகரத்தின் மீது
முதலாவது அணுகுண்டைப்
போட்டது.
டிசம்பர்
1941ல் ஐக்கிய
அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் ஜப்பான்
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை
நேச நாடுகளுக்கு
தளபாட வழங்கலை
மட்டும் செய்து
வந்த அமெரிக்காவும்
போரில் நேரடியாக
ஈடுபட்டது. ஜப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின்
பல பகுதிகளைக்
கைப்பற்றி இந்தியாவின்
கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை
அச்சு நாடுகளுக்கு
சாதகாமாக இருந்த
போர் நிலவரம்
அவ்வாண்டு நேரெதிரானது.
ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு
முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
வடக்கு
ஆப்பிரிக்காவிலும் படைகள் முறியடிக்கப்பட்டு
பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப்
படைகள் நேச
நாட்டு படைகள்
இழந்த பகுதிகளை
ஒன்றன் பின்
ஒன்றாகக் கைப்பற்றத்
தொடங்கின. ஆகஸ்ட்
1945ல் ஜப்பானின்
ஹிரோஷிமா மற்றும்
நாகசாகி நகரங்கள்
மீது அமெரிக்கா
அணு குண்டுகளை
வீசியது. இதன்
விளைவாக ஜப்பான்
சரணடைந்து இரண்டாம்
உலகப் போர்
முடிவடைந்தது.
இப்போரின்
விளைவாக உலக
அரசியலில் பெரும்
மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள்
தங்கள் வல்லமையை
இழந்தன; ஆப்பிரிக்கா
மற்றும் ஆசியாவில்
காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும்,
சோவியத் ஒன்றியமும்
உலகின் புதிய
வல்லரசுகளாகின; அவற்றுக்கு இடையே பனிப்போர் துவங்கியது.
உலக அமைதிக்காக
செயல்பட ஐக்கிய
நாடுகள் அமைப்பும்
உருவாக்கப்பட்டது.
0 comments:
Post a Comment