மனித உரிமை
மீறல்கள் குறித்து இலங்கை மீதான
ஐ.நா விசாரணை
தொடங்கியது
புகார்களை ஆங்கிலத்தில்
மட்டுமின்றி தமிழ் மொழியிலும் அனுப்பலாம்
இலங்கை
மீதான ஐ.நா மனித
உரிமை ஆணையத்தின்
விசாரணை தொடங்கியுள்ளது.
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது
நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்
குறித்து சர்வதேச
விசாரணை நடத்த
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி போர்க்குற்றங்கள்
உள்ளிட்ட மனித
உரிமை மீறல்கள்
தொடர்பான விசாரணையை
ஐ.நா
மனித உரிமை
ஆணையாளர் அலுவலகம்
தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகார்கள் அனைத்தையும்
அக்டோபர் 30ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காணொளிகள்,
நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதரங்களையும்
அனுப்பிவைக்கலாம் எனவும் புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி
தமிழ் மொழியிலும்
அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment