நிறைவேற்று ஜனாதிபதியின் 

அதிகாரத்தைக் குறைக்க குழு


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பதற்குரிய அரசமைப்பு மாற்றத்துக்கான நகலைத் தயாரிக்கும்  நடவடிக்கைகளுக்காக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தக் குழுவை நியமித்துள்ளார் எனத் தெரிய வருகின்றது. அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தை மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்துவது மற்றும் தேர்தல் முறையில் மாற்றங்கள், பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பது, சுயாதீன ஆணைக் குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான விடயங்களும் இந்த நகல் ஆவணத்தில்  இடம்பெறும் எனத் தெரியவருகிறது.  
இதனை உறுதிசெய்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் இந்தப் பணியை ஒப்படைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.  

நான்  சுதந்திரமாக, எனது அனுபவத்தைப் பயன்படுத்தி செயற்படவுள்ளேன்.இது குறித்து ஆராய்ந்து நகல் வடிவை தயாரித்த பின்னர் அதனை புத்திஜீவிகளிடம் சமர்ப்பித்து அவர்களது கருத்தைப் பெறவுள்ளதுடன், ஊவா தேர்தலுக்குப் பின்னர் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளேன். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிகமான அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கை இதுவாகும். எமது பரிந்துரைகளை அவர் நடை முறைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top