‘கயல் சந்திரன் - சன் டிவி விஜே அஞ்சனாவின்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி! (படங்கள்)

கயல் படத்தில் நடித்த சந்திரன் மற்றும் சன் டிவி தொகுப்பாளரான அஞ்சனா ஆகிய இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
எடிசன் விருது வழங்கும் விழாவில் அறிமுகமான சந்திரன் மற்றும் அஞ்சனா ஆகியோர் பிறகு காதலிக்க ஆரம்பித்தார்கள். இது குறித்து சந்திரன் ஒரு பேட்டியில் கூறியதாவது: ‘ஒரு விருது வழங்கும் விழாவில் அஞ்சனாவைப் பார்த்தேன். உடனே எனக்குப் பிடித்துவிட்டது. பிறகு இருவரும் ட்விட்டரில் நிறைய பேசிக்கொண்டோம். அதன்வழியாகத்தான் நன்கு அறிமுகம் ஆகிக்கொண்டோம். நண்பர்களான நாங்கள் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.
சந்திரனுடனான காதல் குறித்து அஞ்சனா கூறும்போது: ‘காதலை மிகவும் ரொமாண்டிக்கான முறையில் சொன்னார். எனது பிறந்தநாளன்று நண்பர்களுடன் உணவுவிடுதிக்குச் சென்றோம். அங்கு ரோஜா பூங்கொத்துகளுடன் காதலை வெளிப்படுத்தினார். மறக்கமுடியாத தருணம்என்று. அஞ்சனா தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் மார்ச் 10 அன்று திருமணம் நடைபெற்றது. அதில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நேற்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா மற்றும் சின்ன திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top