வானை மோதித் தள்ளியது ரயில்
- மணமகன் மணமகள் உட்பட 10 பேர் பலி!
பங்களாதேஷில் திருமண
நிகழ்வை முடித்துக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை
ஏற்றிச் சென்ற
வான் புகையிரதத்தால்
மோதுண்டு விபத்துக்குள்ளானதில்
மணமகன் மணமகள்
உட்பட 10 பேர்
உயிரிழந்தனர்.
தலைநகர் டாக்காவிலிருந்து
சுமார் 145 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உலஹ்பரா
பிராந்தியத் திலேயே இந்த கோர விபத்து
இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரதக்
கடவையொன்றை குறித்த வான் கடக்க முயற்சித்த
போது டாக்கா
நகரை நோக்கிப்
பயணித்த புகையிரதத்தால்
மோதுண்டு விபத்துக்குள்ளானதாக
பிராந்திய அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற
போது அந்த
வானில் 14 பேர்
இருந்துள்ளனர்.
இந்த விபத்தில்
மணமகன் மற்றும்
மணமகள் உட்பட
8 பேர் சம்பவ
இடத்திலேயும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆறரை
வருட காலப்
பகுதியில் அந்நாட்டின்
2,800 கிலோமீற்றர் புகையிரதப் பாதை
வலைப்பின்னலில் இடம்பெற்ற விபத்துகளில் சுமார் 6,000 பேர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment