நள்ளிரவு முதல் பாணின் விலை
ரூபா 5 இனால் அதிகரிப்பு



கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை ரூபா 5 இனால் அதிகரிக்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு (18) அமுலாகும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top