தாம் முழுமையாக
குணமடைந்துள்ளதாகவும்
விரைவில் நாடு
திரும்பவுள்ளதாகவும்,
பொதுஜன பெரமுனவின்
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்
கோத்தாபய ராஜபக்ஸ தெரிவிப்பு
சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததாகவும் தெரிவிப்பு
தற்போது
தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், விரைவில்
நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கோத்தாபய ராஜபக்ஸ சிங்கப்பூர்
வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனும் தன்னை வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளார்
எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில்
மருத்துவ கண்காணிப்பில் உள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவைச்
சந்திக்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே,
இந்திக அனுருத்த, பிரியங்கார ஜயரத்ன ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தனர்.
இதன் போது,
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன்
பாலகிருஸ்ணன் தம்மை வந்து பார்த்துச் சென்றது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோத்தாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
தற்போது
தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், விரைவில்
நாடு திரும்பவுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
இதன்போது
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவும் அங்கு இருந்துள்ளார்.
ஜனாதிபதி
தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகள் குறித்து கோத்தாபய
ராஜபக்ஸவுடன் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
0 comments:
Post a Comment