தாய்லாந்தில் இராணுவம்
திடீர் நடவடிக்கை:
அரசியல் தலைவர்கள்
சிறைவைப்பு
தாய்லாந்தில்
முன்னாள் அதிபர்
உட்பட முக்கிய
அரசியல் தலைவர்கள்
கைது செய்யப்பட்டு
சிறை வைக்கப்பட்டுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில்
திடீர் இராணுவ புரட்சி ஏற்பட்டது.
இடைக்கால அரசு
செயலிழந்த நிலையில்,
சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டுவதற்காக இராணுவ சட்டத்தை
அமுல்படுத்தியது அந்நாட்டு இராணுவம். இராணுவ தளபதி
ஜெனரல் பிரயுத்
சான் ஓசா
தன்னை புதிய
பிரதமராக அறிவித்துக்
கொண்டார்.
இந்நிலையில்
முன்னாள் அதிபர்
இங்லக் ஷினவத்ரா
மற்றும் அவரது
ஆட்சியில் அங்கம்
வகித்த முக்கிய
தலைவர்கள் சிறை
வைக்கப்பட்டுள்ளதாகராணுவம் தற்பொழுது
அறிவித்திருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
என்பதை தெரிவித்துள்ள
இராணுவம், எந்த இடத்தில் சிறை
வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கூற
மறுத்திருக்கிறது. இராணுவ நிர்வாக
குழுவானது, அரசியல் பிரமுகர்கள் உட்பட 35 பேருக்கு
சம்மன் அனுப்பியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தாய்லாந்தில் தொடர்ந்து
பதற்றம் நிலவுவதாகவும்
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment