பெண்ணின் வயிற்றிலிருந்த
ஒரு கிலோ கட்டி:
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்
சிதம்பரம்
காமராஜ் அரசு
மருத்துவமனையில் முதல் முறையாக ஒரு பெண்ணின்
வயிற்றிலிருந்த ஒரு கிலோ எடையுள்ள மிகப்பெரிய
கட்டியை, மருத்துவர்கள்
அறுவை சிகிச்சை
மூலம் அகற்றியுள்ளனர்.
சிதம்பரம்
அருகே உள்ள
கிள்ளை பேரூராட்சி
முடசல்ஓடை மீனவ
கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி சந்திரா
(45). இவர்களுக்கு 3 பெண், 2 ஆண்
குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு
வருடமாக சந்திராவிற்கு
அவ்வவ்போது கடுமையான இரத்தப்போக்கும், வயிற்றுவலி இருந்து
வந்தது. இந்நிலையில்
சந்திரா சிதம்பரம்
காமராஜ் அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். அவரை
தலைமை மருத்துவர்
அமுதா சிவானந்தம்
தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஸ்கேன்
உள்ளிட்ட பல்வேறு
பரிசோதனைகள் செய்தனர். அப்போது அவரது கர்ப்பபையில்
10 அங்குல விட்டமுள்ள
பெரிய கட்டி
இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து
தமிழக முதல்வரின்
விரிவான மருத்துவக்
காப்பீடு திட்டத்தின்
கீழ் தனிவார்டில்
சந்திரா சேர்க்கப்பட்டு
மே 23-ம்
திகதி கடலூர்
இணை இயக்குநர்
(நலப்பணிகள்) டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர்
2 மணி நேரம்
போராடி சந்திரா
வயிற்றிலிருந்த ஒரு கிலோ எடையுள்ள கட்டியை
அகற்றினர். அறுவை சிகிச்சையின் போது தலைமை
மருத்துவர் அமுதா சிவானந்தம், டாக்டர் சாந்தி,
மயக்க மருந்து
டாக்டர் ராமச்சந்திரன்,
தாதியர்கள் ஆனந்தி, பசுபதிநாதம், உதவியாளர் செளந்தரராஜன்
உடனிருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் சந்திராவிற்கு
இரத்தம் கொடுக்கப்பட்டு
நலமாக உள்ளார்.
கட்டியை பரிசோதனைக்காக
கடலூர் கிருஷ்ணா
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment