இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்த அழைப்பில் மாற்றம்
இல்லை :
பாஜகவின் தேசிய ஊடகத்
தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன்
நரேந்திர
மோடி பதவி
ஏற்பு விழாவுக்கு
இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பை,
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக மறுபரீசிலனை
செய்யும் முடிவு
எதுவுமில்லை என பாஜகவின் தேசிய ஊடகத்
தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு
விழா அழைப்பு
என்பது மஹிந்த
ராஜபக்ஸவுக்கு மட்டும் தனியாக அனுப்பப்பட்ட ஒன்றில்லை.
அனைத்து தெற்காசியப்
பிராந்திய அமைப்பு
( சார்க்) நாடுகளின்
தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட ஒன்று என சர்வதேச
ஊடகம் ஒன்றிற்கு
அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீத்தாராமன்
மேலும் தெரிவிக்கையில்-
இது ஒரு பதவி
ஏற்பு வைபவத்தில்
கலந்துகொள்ள அனுப்பப்பட்ட ஒன்றுதானே தவிர இதில்
சொல்லிக்கொள்ள வேறொன்றும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ
ஒன்றுமில்லை.
இலங்கை மற்ற நாடுகளைப் போலல்ல, அது சர்வதேச விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த அழைப்பு தமிழர்கள் மத்தியில் தவறான சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் கூறப்படுகிறதே என்று ஊடகவியலாளர்கள்எழுப்பிய கேள்விக்கு,
இது இலங்கைக்கு அனுப்பப்பட்ட
தனி அழைப்பல்ல
என்ற கருத்தை
மீண்டும் நிர்மலா
சீத்தாராமன் வலியுறுத்தினார்.
காமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல், வெளியுறவுத் துறை அமைச்சரை மட்டும் அனுப்பிய நிலையில், இப்போது மஹிந்த ராஜபக்ஸ டில்லிக்கு இந்த பதவி ஏற்பு வைபவத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளார். இது தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமையும் என்று கூறப்படுவது பற்றிக் கேட்டதற்கு
அது போன்று சொல்ல
முடியாது, ஏனென்றால்,
காமன்வெல்த் மாநாடு போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது,
மற்ற விஷயங்களைப்
பற்றி விவரமாகப்
பேச வாய்ப்பு
கிடைக்கும், ஆனால் இது பதவியேற்பு வைபவத்தில்
கலந்துகொள்ளவே தரப்பட்டிருக்கும் வாய்ப்பு
என்பதால் அதைத்தாண்டி
எதையும் விரிவாகப்
பேச நேரமிருக்காது
என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment