அறிக்கைகள் மட்டுமே! ஆகப் போனது
ஒன்றுமில்லை!!
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
தம்புள்ளை
பள்ளிவாசல், அளுத்கமவில் கடை எரிப்பு, கம்பளையில்
எதிர்ப்பு பேரணி
இவைகள் மூன்றும்
கடந்த முப்பது
நாட்களுக்குள் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சம்பவங்கள்.
பிரித்தானியாவில் எதிர்ப்பு பேரணி நடத்தினாலும் சரி,
ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாலும் சரி முஸ்லிம்களுக்கு
எதிரான எங்கள்
நடவடிக்கைகள் தொடரும் என்ற பாணியில் சிஙகள
இனவாத அமைப்புகளினதும்
சிங்கள இனவாத
தனி நபர்களினதும்
நடவடிக்கைகள் தொடர்கிறது.
மறுபக்கத்தில்
முஸ்லிம் தரப்புகளும்
இவ்வறான செயல்கள்
இடம்பெறும் போது மட்டும் உஷாரடைவதும் அறிக்கையிடவதும்
பின்னர் வழமை
நிலைக்கு திரும்புவதுமான
நிலை. இவற்றினை
மட்டுமே அவர்களால்
செய்ய முடிகிறது.
முஸ்லிம்
தரப்புகள் முடிந்தவற்றைச்
செய்கிறார்கள். ஆனால் அவற்றுக்கான முடிவினை அவர்களால்
காண முடியாது
போகிறது. அரச
தரப்பும் வாக்குறுதிகளை
வழங்குக்கிறது. உடனடி நடவடிக்கை என்று கூறுகிறது.
ஆனால், ஒன்று
நடந்தபாடில்லை. இதுதான் உண்மை நிலைமை.
அண்மையில்
தம்புள்ளை பள்ளிவாசலின்
ஒருபகுதி வீதி
அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.
இதனை இனாமளுவே
சுமங்கல தேரர்
நேரடியாகவே நின்று கண்ணகாணித்தார் என செய்திகள்
வெளிவந்திருந்தன. குறித்த பள்ளிவாசலின் ஒரு பகுதியை
இடிக்க அதிகாரிகள்
விரும்பாத போதும்
இனாமளுவே சுமங்கல
தேரர் அங்கு
சென்று முழுமையாக
இடிக்குமாறு உத்தரவிட்டதாகவும் பள்ளிவாசல்
நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
தேரர்
ஒருவரே வந்து
பிறிதொரு மதத்தின்
வணக்க வழிபாட்டு
தலத்தை இடிக்க
உத்தரவிடும் அளவுக்கு வெசாக் மாதம் அமைந்திருந்தது.
அத்துடன் நாட்டின்
சட்டம் ஒழுங்கு
மாறியிருப்பதும் வேதனையான விடயமே.
இந்த
விடயத்தில் முஸ்லிம்கள் கட்சிகள் தலையிட்டு நிலைமையைக்
கட்டுக் கோப்புக்குள்
கொண்டு வந்தாலும்
பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டா என்ற உத்தரவாதம் அற்றுப்
போயுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்
வெளிநாடுகளில் இருந்ததானால் அவர்களின் வழிகாட்டலின் கீழ்
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளாலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன்
நேரடியாக தொரடர்பு
கொண்டு நிலைமைகளை
விளக்கியதனாலும் தம்புள்ளையின் அசாதாரண நிலைமை சாதாரண
நிலைக்கு திரும்பியதே
தவிர முடிவுகள்
இன்றும் முற்றுப்
பெறாத நிலையிலேயே
உள்ளன.
தம்புள்ளைக்கு
பிரதியமைச்ர் பைசர் முஸ்தபாவும் முஸ்லிம் காஙகிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் வெவ்வேறாக சென்று
நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.
ஆனால் அவர்களால்
பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எந்தவிதமான
நம்பிக்கையையும் அவர்களால் கொடுக்க முடியாது போவிட்டது
என்பதே உண்மை.
அமைச்சர்
ஹக்கீம் நாடு
திரும்பிய பின்னர்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை சந்தித்து
இந்த விடயங்கள்
தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்
போது நிலைமையை
விரிவாக எடுத்துக்
கூறிய அமைச்சர்
ஹக்கீம், முஸ்லிம்களுக்கு
எதிராக இடம்பெற்றுக்
கொண்டிருக்கும் இந்த விடயங்களில் முஸ்லிம்கள் மத்தியில்
பலத்த அதிருப்தி
நிலவுவதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி
கவலையை வெளியிட்டிருந்தார்.
அளுத்கமை
வர்த்தக நிலைய
சம்பவத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும்
பாரதூரமானதென்றும் அங்கு சட்டத்தையும்
ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸாரும், பாதுகாப்பை பலப்படுத்த
படையினரும் தவறி விட்டனர் என்றும் அமைச்சர்
ஹக்கீம் ஜனாதிபதியிடம்
தெரிவித்திருந்தார்.
அதன்
போது தம்புள்ளை
பள்ளிவாசல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை
நிறுத்துவதற்கும் முஸ்லிம் அமைச்சர்களுடன் அது பற்றி
கலந்தாலோசிப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம்
தெரிவித்திருந்தார். ஆனால் இன்று
வரை அந்தச்
சந்திப்பு இடம்பெறவில்லை.
இதேவேளை,
அளுத்கமைவில் அமைந்திருந்த ஒரு பாரிய வர்த்தக
நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
இதன் காரணமாக
அந்த நிறுவனத்தின்
உரிமையாளருக்கு ஐந்து கோடி ரூபா வரை
நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்
சம்பவமானது பிற சிங்கள பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம் வர்த்தக நிலைய உரிமையாளர்களை
அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன் பின்னணிகள்
குறித்து பகிரங்கமாகவே
அனைத்தும் தெரிந்த
நிலையில் இதுவரை
எவ்வித நடவடிக்கைகளும்
இல்லை. முறைப்பாடு
புத்தகத்தில் மட்டுமே பதியப்பட்டுள்ளன. அது தொடர்பில்
எந்தச் செயற்பாடும்
இல்லை.
இந்தச்
சம்பவம் இடம்பெற்ற
இடத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
கொழும்பு திரும்பியதும்
கண்டன அறிக்கை
ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். குறித்த
தீ வைப்புச்
சம்பவத்தின் பின்னணியையும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
சம்பவம்
இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அப்பிரதேசத்தில்
சில பௌத்த
பிக்குகள் குறித்த
வர்த்தக நிலையத்திற்கு
எதிராக ஆர்ப்பாட்டத்திலும்
ஈடுபட்டிருந்ததாகவும் அதன் பின்னர்
வர்த்தக நிலையம்
எரிந்துள்ளது என்றால் இது திட்டமிடப்பட்ட சதியாக
இருப்பதற்கு பலமான சாத்தியக் கூறு இருக்கின்றது
என்றும் அமைச்சர்
ரிஷாத் தெரிவித்திருந்தார்
முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும்
அடாவடித்தனங்கள் அல்லது வன்முறைகள் தொடர்பான குற்றவாளிகள்
முழு நாட்டிற்கும்
மட்டுமல்ல முழு
உலகத்திற்குமே தெரிந்தாலும் இலங்கையின் பொலிஸாருக்கு மட்டும்
அவர்களைக் கண்டுபிடிக்க
முடியாத ஒரு
சூழ் நிலை
காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 க்கும்
மேற்பட்ட வன்முறைச்
சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வரை அடையாளம்
காணப்படவில்லை என்றெல்லாம் அவர் கடுமையாகச் சாடியிருந்தார்.
இதேவேளை,
பிரதியமைச்சரான ஏ.ஆர்.எம்.ஏ காதரின் கம்பளையிலும்
முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தவாத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம்களின் இன்றைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு
முஸ்லிம் அமைச்சர்கள்
எம்.பிக்களால்
அனுப்பி வைக்கப்பட்ட
கடிதத்தில் ஒப்பமிடாத பிரதியமைச்சர் காதரின் கம்பளையில்
இடம்பெற்ற இந்தச்
சம்பவத்தை பிரதமர்
தி.மு
ஜயரத்ன நேரில்
சென்று கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்திருந்தார்.
இவ்வாறெல்லாம்
கடந்த முப்பது
நாட்களுக்குள் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் இவை அனைத்துக்கும் முற்றுப் புள்ளி
வைக்கப்படவில்லை. இது முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியைத்
தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம்கள்
தேர்தலில் எங்களுக்கு
வாக்குத் தரமாட்டார்கள்.
ஆனால் புரியாணியும்
வட்டலப்பமுமே தருவார்கள் என அரச தரப்பினர்
அடிக்கடி கூறி
வருகின்றனர். அதுதான் உண்மை என்றால் அதற்கான
காரணத்தை அரச
தரப்பார் புரிந்து
கொள்ள இதுவும்
ஒரு சந்தர்ப்பம்
அலல்வா?
இதேவேளை,
தமிழருக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்
இனப்பிரச்சினை என்று முஸ்லிம்கள் கூறும் நிலைமை
உருவாவதனை அரசாங்கம்
விரும்புகிறதா? அல்லது அவ்வாறானதொரு நிலையை உருவாக்க
முயற்சிப்போரை அரசாங்கம் ஊக்கிவிக்கிறதா என்பதே இன்று
எழுந்துள்ள கேள்வி.
இப்போது
எழுந்துள்ள இந்தப் பிரச்சினைகள் இன்று சின்னதாக
இருக்கலாம். ஆனால் நாளை பெரியதாக மாறும்
போது விபரீதமாகவம்
முடியலாம். எனவே, இந்த விடயத்தில் திரிகரணசுத்தியுடன்
அரசு செயற்பட்டு
முடிவுகளை எட்டவேண்டும்.
இதேவேளை,
அண்மையில் மட்டக்களப்புக்குச்
சென்றிருந்த அமைச்சர் பௌஸி ஒரு கூட்டத்தில்
உரையாற்றும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு
பஹ்ரைனில் வழங்கப்பட்ட
கலீபா எனும்
பட்டம் மிகப்
பெறுமதியானதாகும். அந்த நாடு
இவ்வாறான ஒரு
பட்டத்தை நமது
நாட்டு ஜனாதிபதிக்கு
வழங்கியது என்பது
இலங்கை மக்களுக்கு
குறிப்பாக இலங்கை
முஸ்லிம்களுக்கு பெரும் மகிழச்சியளிக்கின்றது.
இந்த மகிழச்சியை
கொண்டாடும் முகமாக எதிர்வரும் 31ஆம் திகதி
கொழும்பு சுகததாச
அரங்கில் வைபவமொன்றை
ஏற்பாடு செய்துள்ளோம்
என தெரிவித்துள்ளார்.
இந்த
வைபவம் நன்றாகவே
நடந்தேற வேண்டும்.
அதேவேளை, முஸ்லிம்கள்
எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் ஒரு சாவு மணியடிக்கும்
விழாவாகவும் அது அமைய வேண்டும்.
தவறும்
பட்சத்தில் பூனைக்கு மணி கட்டுவது யார்
என்று கேட்பதனை
விடுத்து எலிக்கு
மணி கட்டுவது
எவர் என்றே
கேட்கத் தோன்றும்.
-நன்றி
வீரகேசரி வார வெளியீடு 2014.05.18
0 comments:
Post a Comment