சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை!
மாகாண சபை
உறுப்பினர்
ஜெமீல் மாற்றுக் கருத்து
“ பார்க்கலாம்“
என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிப்பு
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சாய்ந்தமருதுவுக்கு
தனியான பிரதேச
சபை (உள்ளுராட்சி
அமைப்பு) ஒன்றினை
உருவாக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைச்
சேர்ந்த சிலர்
விருப்பம் கொள்ளவில்லை
எனத் தெரிய வந்துள்ளது.
நேற்று
22ஆம் திகதி வியாழக்கிழமை அமைச்சர் ரவுப் ஹக்கீம்
தலைமையில் இடம்பெற்ற
ஒரு கூட்டத்தில்
இந்த விடயம்
பிரஸ்தாபிக்கப்பட்ட போது ஒரு
சிலர் இந்த
விடயம் தொடர்பில்
தமது நல்லிணக்கத்தை
வெளிகாட்டவில்லை என்றும் இதற்கான மாற்றீடான யோசனைகளை
முன்வைத்தனர் என்றும் எனக்குக் கிடைத்த பல
தரப்பினரதும் தகவல்களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த
விடயம் நேற்று
ஆராயப்பட்ட போது கிழக்கு மாகாண சபை
முஸ்லிம் காங்கிரஸ்
குழு தலைவரும்
சாய்ந்தமருதைச் சேர்நதவருமான ஏ.எம். ஜெமீல்
இவ்வாறு தெரிவித்தார்
என என்னிடம்
பலராலும் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது.
”முன்னாள் கல்முனை மேயரான சிராஸ் மீராசாகிபினால் சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை ஒன்றின் அவசியம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊரில் எழுந்துள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு (சமாளிப்பதற்கு) சாய்ந்தமருதுவில் கல்முனை மாநகர சபையின் உப அலுவலகம் ஒன்றினையேனும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”'
என்ற
பொருள்பட ஜெமீல்
தனது கருத்தினைத்
தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பில் கருத்துத்
தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம் “ பார்க்கலாம்“
என பதிலளித்துள்ளார்.
0 comments:
Post a Comment