இந்திய மத்திய அரசின்
புதிய முடிவு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மோடி விருந்து
இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களுக்கு மோடி விருந்து அளிக்க
உள்ளார். அப்போது, இருநாட்டு உறவுகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மோடி பேசுவார்
என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நரேந்திர
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தான் அதிபர்
ஹமீத் கர்சாய்,
பூட்டான் பிரதமர்
டெஷிசிரிங் டொப்கே, நேபாள பிரதமர் சுசில்
கொய்ராலா, மாலத்தீவு
அதிபர் அப்துல்லா
யாமின் அப்துல்
கயூம் உள்ளிட்டோர்
உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில்,
விழாவில் கலந்து
கொள்ளும் தலைவர்கள்
அனைவருக்கும் மோடி விருந்து அளிக்க உள்ளார்.
இது பற்றி
வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர் சையது
அக்பருதீன் நேற்று அளித்த பேட்டியில், நமது
நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர்
விருந்து அளிப்பது
வழக்கம். அதன்படி,
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சார்க் நாட்டு
தலைவர்களுக்கு அவர் விருந்து அளிக்க உள்ளார்.
அப்போது, இருநாட்டு
உறவு பற்றி
ராஜபக்ஸவுடன் மோடி பேசுவார் எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment