நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பங்கேற்பு
இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.
நரேந்திர
மோடி பிரதமாராக
பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என்று
இலங்கை அரசு
தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்றத்
தேர்தலில் பாரதீய
ஜனதா கட்சி
அமோக வெற்றி
பெற்றது. நாட்டின்
பிரதமராக நரேந்திர
மோடிஎதிர் வரும்
திங்கள் கிழமை
மாலை 6 .00 மணிக்கு
பதவி ஏற்கிறார்.
இந்தியப் பிரதமராக
மோடி பதவியேற்கும்
விழாவில் கலந்துகொள்ளுமாறு,
சார்க் நாடுகளின்
தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின்
பிராந்தியக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும்
மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்து, பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில், மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை இலங்கை அரசு உறுதிபடுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment