மோடி பிரதமரானதால் இந்தியாவில் இருந்து வெளியேறமாட்டேன்:

ஞானபீடவிருதுபெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி

நரேந்திரமோடி பிரதமரானதால் இந்தியாவில் இருந்து நான் வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என்று ஞானபீடவிருதுபெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவை தேர்தலின்போது,மோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஞானபீடவிருதுபெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி.
இந்நிலையில், மோடி பிரதமராகியுள்ளதால் அனந்த்மூர்த்தி இல்லத்திற்கு எதிராக நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதோடு, சுவரொட்டிகளையும் ஒட்டிவருகிறார்கள்.
 வெளிநாட்டு விமானபயணச்சீட்டு எடுத்து அவருக்கு அனுப்பிவைத்துள்ளனர். அனந்த்மூர்த்தியை சிலர் தொலைபேசியில் மிரட்டிவருவதாக வந்த செய்தியை அடுத்து, அவரது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அனந்த்மூர்த்தி கூறியிருப்பதாவது: மோடி பிரதமரானால் இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக வாய்தவறிகூறிவிட்டேன். அந்த நோக்கத்தோடு நான் கூறவில்லை. கர்நாடகம் நான் பிறந்தமண். இங்கிருந்து நான் ஏன் வெளியேற வேண்டும். கொலைமிரட்டல் இல்லாவிட்டாலும், மனதளவில் என்னை நிந்திக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் பாஸிஸ அணுகுமுறை இது. இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.

மோடி மீது தனிப்பட்ட பகைமை எதுவுமில்லை. 2002-இல் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் அவருக்கு பங்கு இல்லாவிட்டாலும், அவரது ஆட்சியில் நடந்ததால் அப்போது அவர் பதவிவிலகியிருக்க வேண்டும். மோடி இப்போது எனக்கும் பிரதமர். மோடி நல்லது செய்தால் பாராட்டுவேன், தவறு செய்தால் கண்டிப்பாக கண்டிப்பேன். விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இந்தியாவை சீனா போல பலம்வாய்ந்த அணுசக்தி நாடாக உயர்த்த மோடிக்கு இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். அப்படிப்பட்ட நாட்டை நான் கனவுகாணவில்லை. பலம்வாய்ந்த ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளால் அழிவு ஏற்பட்டதை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top