நவாஸ் ஷெரிப் இந்தியா செல்வதற்கு
பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு
இந்திய பாராளுமன்ற தேர்தலில்
பாரதீய
ஜனதா
கட்சி
அமோக
வெற்றி
பெற்று மத்தியில்
ஆட்சியை கைப்பற்றியது.
நரேந்திர மோடி
தலைமையில் புதிய
அரசுபுதிய அரசு
எதிவரும் 26 ஆம் திகதி (திங்கள்கிழமை)
பதவி ஏற்கிறது. ஜனாதிபதி
மாளிகை முற்றத்தில்
மாலை 6 மணிக்கு
பதவி ஏற்பு
விழா நடைபெறும்
என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழாவுக்கான
ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விழாவில்
பங்கேற்க தெற்காசிய
கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டு இருக்கிறது. சார்க் அமைப்பில் உள்ள
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து
கொள்வார் என்று
முதலில் தகவல்கள்
வெளியாகின. பின்னர் அவர் கலந்து கொள்ள
மாட்டார் என்றும்
அவரது சார்பில்
அந்நாட்டு அதிகாரி
கலந்து கொள்வார்
என்றும் தகவல்கள்
வெளியாகின. இவ்விவகாரத்தின் இறுதி நிலையை இன்று
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியா
வருவதற்கு அந்நாட்டு
ராணுவம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment