கும்பகோணம் பாடசாலை தீ விபத்து
10 பேர் குற்றவாளிகள்
11 பேர் விடுதலை
தீர்ப்பு ஒத்திவைப்பு

94 பிஞ்சு குழந்தைகள் கருகி பலியான கும்பகோணம் பாடசாலை தீவிபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தை மட்டுமின்றி உலகத்தையேயே உலுக்கிய கும்பகோணம் பாடசாலை தீ விபத்து 2004–ம் ஆண்டு ஜூலை 16–ஆம் திகதி நடந்தது.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு பொலிஸார் விசாரணை நடத்தினர். வழக்கில் தொடக்கப் பாடசாலை கல்வி இயக்குனர் கண்ணன் உள்பட 21 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர். இந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட மேலும் 10 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தீர்ப்பளித்துள்ள நீதிபதி முகமது அலி, தீர்ப்பு  விவரத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top