கல்முனை மீசான் மகளீர் கூட்டத்தில் ஹரிஸ் எம்.பி.!

(வி.ரி.சகாதேவராஜா)
                                                                                                                                                   
கல்முனை மீசான் மகளீர் அபிவிருத்தி சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான விசேட கூட்டம் அமைப்பின் ஆலோசகர் ஏஆர்.எம் சுபைர் தலைமையில் நேற்று பி.. 3.30 மணியளவில் சங்க காரியாலயத்தில் இடம் பெற்றது. இதில் ஆரம்ப நிகழ்வாக சுயதொழில் ஊக்குவிப்பு சம்மந்தமான  விளக்கவுரையினை  கல்முனை விதாதா வள நிலையத்தின் வளவாளர் பி.தர்மேந்திரன்; வழங்கினார்.
அதனை தொடர்ந்து கல்முனை பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் .எல்.முஸ்பிரா 20 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறுவர் மகளீர் விவகார அமைச்சின் மூலம் வழங்கப்படவுள்ள வாழ்வாதார உதவி கொடுப்பனவு தொடர்பாக விளக்கினார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம். றியாழ், கல்முனை, துறைநீலாவணை  இராணுவ பிரிவின் பொறுப்பதிகாரிகளான எச்.எம்.வசந்த தேரோ மற்றும் பிரபாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்
இச் சங்க அபிவிருத்திக்கும், பெண்களின் வாழ்வாதார உதவிக்கும்  தன்னால் இயலுமான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அத்துடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இச் சங்க நிர்வாக நடவடிக்கைக்கான நிதி உதவியினை மிக விரைவாக பெற்றுத்தருவதாக கூறினார்.
மேலும் சங்க தலைவி றிலீபா பேகம்; உரையாற்றுகையில் தங்களது மீசான் மகளீர் அபிவிருத்தி சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அங்கத்தவர்களின் ஒன்றிணைந்த சுயதொழில் வருமான திட்டம் சம்மந்தமாக  விளக்கினார்.
பல்லின மக்களும் ஒன்றிணைந்த இந் நிகழ்வில் இறுதியில் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
















           

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top