நளினி தொடர்ந்த
வழக்கு
இந்திய மத்திய அரசுக்கு
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வழக்குகளில்
குற்றவாளிகளை விடுவிக்கும் முன்னர் மத்திய அரசிடம்
கருத்து கேட்கும்படி
கூறும் சட்டத்தை
நீக்கக் கோரி
நளினி தொடர்ந்த
வழக்கில் இந்திய
மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு
இந்திய உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி
நளினி, குற்றவாளிகளை
விடுவிக்க மத்திய
அரசிடம் கருத்து
கேட்கும்படி கூறும் இந்திய கிரிமினல் தண்டனைச்
சட்டப்பிரிவு 435(1)-வை நீக்கக்கோரி
வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த
வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சிபிஐ வழக்குகளில்
குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு
உண்டு என
நளினி தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இநிந்லையில்,
வழக்கை விசாரித்த
உச்ச நீதிமன்றம்,
இவ்விவகாரத்தில் மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்
கொலை வழக்கில்
தண்டனை விதிக்கப்பட்ட
நளினி கடந்த
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.
1998-ல் அவருக்கு
தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது. பின்னர் அவரது தூக்கு தண்டனை
ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில்,
கடந்த பெப்ரவரி
மாதம் ராஜீவ்
கொலை வழக்கில்,
முருகன், சாந்தன்,
பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுவிப்பதற்க்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
பின்னர், நளினி,
ராபர்ட் பயஸ்,
ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுவிக்க தடை
விதித்து உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment