முஸ்லிம் பணியாளரின் நோன்பை முறித்த விவகாரம்
சிவசேனா எம்.பி.க்கள் மனிப்பு கேட்க மறுப்பு
முஸ்லிம்
ஊழியரின் நோன்பை முறிக்கும் வகையில் அவரது வாயில் உணவை திணித்த விவகாரத்தில் மன்னிப்பு
கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான சாம்னாவில் எழுதப்பட்ட தலையங்கத்தில்
இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிர அரசு, அரசியல் மற்றும் மதச் சாயம் பூச முயற்சிப்பதாக
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தரமற்ற உணவு பரிமாறப்பாடுவதை எதிர்த்து குரல் கொடுத்ததை
தவிர சிவசேனா எம்.பி.க்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவசேனாவின்
கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. சிவசேனா எம்.பி.க்கள்
வரம்பு மீறி
நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அக்கட்சி
செய்தி தொடர்பாளர்
ரஷி தாள்வி
வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை சிவசேனா
எம்.பி.க்கள் குலைத்துவிட்டதாக
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியும் விமர்ச்சித்துள்ளது.
பிரச்சனையை
முடிப்பதற்கு பதிலாக அதை வளர்க்கவே சிவசேனா
விரும்புகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் டி .ராஜா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாநிலங்களவையில்
கேள்வி நேரம்
தொடங்கியதும் காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட
கட்சிகளின் உறுப்பினர்கள் இன்றும் அந்த பிரச்சனையை
எழுப்பி அரசின்
விளக்கத்தை கோரினார்கள். இதனால் சிறிது நேரம்
கூச்சல் குழப்பம்
நிலவியது. சம்மந்தப்பட்ட
எம்.பி.க்கள் மீது
நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்று அவர்கள்
வலியுறுத்தினார்கள்.
நாடாளுமன்ற
விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாளை
இந்த பிரச்சனையை
பற்றி விளக்கமளிக்கப்படும்
என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து
அவையில் அமைதி
ஏற்பட்டது. டில்லி, மகாராஷ்டிரா பவனில் உணவு
தயாரிப்பு மேற்பார்வையாளர்
அர்ஷத் வாயில்
சிவசேனா எம்.பி.க்கள்
வலுக்கட்டாயமாக உணவை திணிக்கப்பட்டதால் அவரது நோன்பு
பாதிக்கப்பட்டதே சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
0 comments:
Post a Comment