ஆபிரிக்காவில்
உள்ள மாலி நாட்டில்
அல்ஜீரிய விமானம்
விழுந்து நொறுங்கியது
விபத்துக்குள்ளான விமானம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
‘சுவிப்ட் ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
ஆபிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிப்பந்திகள் உட்பட 116 பேர் பலி ஆனார்கள் என்பது தெரிந்ததே.
இந்த
விமானத்தில் பயணம் செய்தவர்களில் 50 பேர் பிரான்ஸையும்,
24 பேர் புர்கினா
பாசோவையும், 8 பேர் லெபனானையும், 4 பேர் அல்ஜீரியாவையும்,
2 பேர் லக்சம்பர்ககையும்,
தலா ஒருவர்
பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நைஜீரியா,
கேமரூன், உக்ரைன்,
ருமேனியா நாடுகளைச்
சேர்ந்தவர்கள் என தெரியவந்து இருப்பதாக ஏர்
அல்ஜீரியா நிறுவனத்தின்
பிரதிநிதி ஒருவர்
புர்கினா பாசோவில்
நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான
விமானம் ஸ்பெயின்
நாட்டைச் சேர்ந்த
‘சுவிப்ட் ஏர்’
நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். அதை ஏர்
அல்ஜீரி விமான
போக்குவரத்து நிறுவனம் குத்தகைக்கு எடுத்து போக்குவரத்துக்கு
பயன்படுத்தி வந்தது. விமான சிப்பந்திகள் 6 பேரும்
ஸ்பெயின் நாட்டைச்
சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
உக்ரைன்
நாட்டின் கிழக்கு
பகுதியில் கடந்த
17ஆம் திகதி மலேசிய விமானம் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில்
சிப்பந்திகள் உட்பட 298 பேர் பலி ஆனார்கள்.
தைவான் நாட்டில்
நேற்று முன்தினம்
ஒரு விமானம்
தரை இறங்கும்
போது விழுந்து
நொறுங்கியதில் 51 பேர் உயிர் இழந்தனர். இந்த
நிலையில் ஆப்பிரிக்க
கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் நேற்று
மற்றொரு விமான
விபத்து நடந்தது.
ஆப்பிரிக்க
கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாடுகள்
அல்ஜீரியா, புர்கினா பாசோ, மாலி. குட்டி
நாடான புர்கினா
பாசோவின் தலைநகர்
அவ்கதோகவில் இருந்து அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்சுக்கு
நேற்று விமானம்
ஒன்று புறப்பட்டுச்
சென்றது. அல்ஜீரியா
நாட்டின் ஏர்
அல்ஜீரி விமான
போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில்
110 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகள் என மொத்தம்
116 பேர் இருந்தனர்.
சிப்பந்திகளில் 2 பேர் விமானிகள் ஆவார்கள்.
அவ்கதோகவ்
நகரில் இருந்து
கிளம்பிச் சென்ற
50 நிமிடத்தில் மாலி நாட்டின் வட பகுதியில்
காவோ என்ற
இடத்துக்கு அருகே அல்ஜீரியா எல்லையை விமானம்
நெருங்கிக் கொண்டிருந்த போது, அதனுடன் தொடர்பு
துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பதற்றம்
ஏற்பட்டது. பின்னர் மாலி நாட்டின் வட
பகுதியில் உள்ள
காட்டில், இலங்கை
நேரப்படி நேற்று
காலை 8 மணி
அளவில் அந்த
விமானம் விழுந்து
நொறுங்கியது தெரிய வந்தது.
விமானம்
விழுந்து நொறுங்கியதை
அல்ஜீரிய நாட்டு
அதிகாரி ஒருவர்
உறுதி செய்தார்.
இந்த
விபத்தில் அதில்
பயணம் செய்த
சிப்பந்திகள் உள்ளிட்ட 116 பேரும் பலி ஆனார்கள்.
இதுபற்றிய தகவல்
கிடைத்ததும் அந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
சகாரா
பாலைவன பகுதிக்கு
மேலே விமானம்
பறந்து கொண்டிருந்த
போது மோசமான
வானிலை உருவானதாலும்,
அதே பாதையில்
தொடர்ந்து சென்றால்
வேறு விமானத்துடன்
மோதும் ஆபத்து
இருப்பதாலும் வேறு பாதையில் செல்லுமாறு தரை
கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிக்கு அறிவுறுத்தப்பட்டதாக
தகவல் வெளியாகி
உள்ளது.
மாலி
நாட்டின் வடபகுதியில்
கிளர்ச்சி நடந்து
வருகிறது. அதை
அடக்குவதற்காக அங்கு சர்வதேச படை சென்றுள்ள
போதிலும் கிளர்ச்சி
நீடிக்கிறது. இந்த நிலையில் மாலி நாட்டில்
அல்ஜீரிய விமானம்
விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
0 comments:
Post a Comment