தைவான் விமான
விபத்தில் 51 பேர் பலி
(படங்கள்)
தைவானில்
அவசரமாகத் தரையிறங்கிய
டிரான்ஸ்ஆசிய விமானம் விபத்துக்குள்ளானதில்
51 பேர் பலியாயினர்.
மேலும் 7 பேர்
படுகாயமடைந்தனர்.
நேற்று
தைவானில் மாட்மோ
சூறாவளித் தாக்கியது.
புயலின் மையம்
சீனாவில் இருந்தாலும்
தைவானில் கடும்
மழை எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது.
இந்த
நிலையில் தலைநகர்
தைபேயிலிருந்து பெங்குவிற்கு இந்த விமானம் புறப்பட்டது.
இந்த நிலையில்
அவசரமாகத் தரையிறக்க
முயற்சி செய்யபட்டபோது
விபத்துக்குள்ளாகி 51 பேர் பலியானதாக
ஏஜென்சி செய்திகள்
தெரிவிக்கின்றன.
மோசமான
வானிலை காரணமாக
அவசரத் தரையிறக்கம்
மேற்கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில்
54 பயணிகளும், ஊழியர்களும் இருந்ததாக தைவான் வான்வழிப்
போக்குவரத்து நிர்வாகத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தைவானிலுள்ள
கோசியுங்கிலிருந்து மாகுங் பகுதிக்கு
ஏ.டி.ஆர்.-72 ரக
பயணிகள் விமானம்
ஒன்று 54 பயணிகளுடன்
இன்று மாலை
5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது. 4 மணிக்கே
புறப்பட வேண்டிய
அந்த விமானம்
மோசமான வானிலை
காரணமாக தாமதமாக
புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து வானிலை
சரியில்லாத காரணத்தால் அந்த விமானம் சென்றடைய
வேண்டிய மாகுங்
நகரில் தரையிறங்க
முடியவில்லை. எனவே, விமான அதிகாரிகள் 7.06 மணி
வரை காத்திருக்குமாறு
விமானியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து,
விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை
தரையிறக்க முயற்சி
செய்திருக்கிறார். ஆனால், அவரது
முதல் முயற்சி
தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 2-வது முறையாக
தரையிறங்க அதிகாரிகளிடம்
அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால், அதற்குள்
விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு
கிடைத்த தகவலில்,
அந்த விமானம்
பெங்கு தீவிலுள்ள
ஹூஷி குடியிருப்பு
பகுதியில் தரையில்
விழுந்து நொறுங்கி
விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இதில், 2 வீடுகளும்
சேதமடைந்து தீப்பிடித்தன.
முதற்கட்ட
விசாரணையில், விமானம் பெங்கு தீவிற்கு மேல்
பறந்து கொண்டிருந்தபோது
கடுமையான மழையும்,
மோசமான காற்றும்
வீசியதால் விமானம்
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இதில் 51 பேர்
பலியாகியுள்தாகவும், 8 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஒரு வாரத்தில்
நிகழ்ந்துள்ள 2-வது மிகப்பெரிய விமான விபத்து
இது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment