தீவிரவாதக் குழுக்களின்
தளங்கள் இலங்கைக்குள் இல்லை
பாதுகாப்பு
அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவிப்பு
இலங்கையில் அல்குவைதா அமைப்போ அல்லது ஏனைய பயங்கரவாத
அமைப்புகளோ தளங்களைக் கொண்டிருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு
அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய, "வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையைத்
தமது பயிற்சித் தளமாக வைத்திருக்கின்றன என்று பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான குழுக்கள் இலங்கைக்குள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு எந்தச் சந்தர்ப்பங்களையும்
வழங்கவில்லை.
பயங்கரவாதம் எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமே.
முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயன்றால்
அதற்கு இடம் வழங்கப்படமாட்டாது. விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வாறு தோற்கடிக்கப்பட்டதோ,
அவ்வாறே இதுவும் மேற்கொள்ளப்படும். இலங்கையிடம்
உண்மைகளைக் கண்டறியும் திறன் உள்ளது. இங்கு மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுத்தப்பட்டால்
அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையில் செயற்படுவது தொடர்பில் இராணுவமோ
அல்லது பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவுகளோ எந்தத் தகவல்களையும் பெறவில்லை'' என்று
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment