இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு
இந்தியா உட்பட 29 நாடுகள்
ஆதரவாக வாக்களித்துள்ளன.
காஸா
மீதான இஸ்ரேல்
தாக்குதல் குறித்து
சர்வதேச விசாரணைக்கு
வலியுறுத்தும் வகையில் ஐ.நா. மனித
உரிமைகள் கவுன்சிலில்
தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் 47 உறுப்பினர்களை
கொண்ட ஐ.நா மனித
உரிமைகள் கவுன்சிலில்
இந்தியா, ரஷியா,
பிரேசில், சீனா,
தென் ஆப்பிரிக்கா
உட்பட 29 நாடுகள்
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேலுக்கு ஆதரவு
அளிக்கும் வகையில்
அமெரிக்க மட்டும்
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. தீர்மானம் மீதான
வாக்கெடுப்பில் 17 நாடுகள் கலந்து
கொள்ளவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட
பாலஸ்தீன பகுதிகள்,
கிழக்கு ஜெருசலே
பகுதிகளில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிக்க கோரி
பாலஸ்தீனத்தின் சார்பில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு
ஆதரவாக,
பிரேசில், ரஷியா, சீனா, இந்தியா, தென்
ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் சேர்ந்த ‘பிரிக்ஸ்’
என்ற அமைப்பு
வாக்களித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கும்,
காஸா முனையை
ஆட்சி செய்துவரும்
பாலஸ்தீன ஹமாஸ்
போராளிகளுக்கும் இடையே கடந்த 8 ஆம் திகதி தொடங்கிய
சண்டை தொடர்ந்து
நீடித்து வருகிறது.
இருதரப்பு
சண்டையை முடிவுக்கு
கொண்டு வருவதற்காக
அமெரிக்கா, எகிப்து நாடுகள் முன்னின்று முயற்சி
செய்து வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா, தனது
நாட்டின் வெளியுறவுத்துறை
அமைச்சர் ஜான் கெர்ரியை எகிப்திடமும், அரபு லீக்கிடமும்
பேச வைத்தார்.
ஐ.நா.
பொதுச்செயலாளர் பான் கி மூனும் எப்படியாவது
சண்டை நிறுத்தத்தை
அமல்படுத்தியாக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு
வருகிறார். இவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நேட்டன் யாஹூவை
சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம்
காஸா முனையிலிருந்து தங்கள் நாட்டின்
மீது வீசப்பட்ட
ராக்கெட்டுகளை இஸ்ரேல் பிரதமர் காட்டினார். அதை
கண்டு அதிர்ச்சி
அடைந்த பான்
கி மூன்,
தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
இஸ்ரேல்
மற்றும் ஹமாஸ்
இயக்கத்தினர் சமானதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சர்வதேச விசாரணை
மேற்கொள்ள வலியுறுத்தி
ஐ.நா
மனித உரிமைகள்
ஆணையம் தீர்மானம்
கொண்டு வந்தது.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தையில்
ஈடுபட வேண்டும்
என்று இந்தியா
வலியுறுத்தியிருந்தது.
பிரிட்டனில்
ஜனநாயக விடுதலைக்
கட்சியைச் சேர்ந்த
எம்.பி.
டேவிட் வார்டு,
காஸா மீது
இஸ்ரேல் தாக்குதல்
நடத்தி வருவதற்கு
டுவிட்டர் இணைய
தளத்தில் தனது
கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment