தைவானில் விமானம் தரையிறங்கும் போது பயங்கர விபத்து:
51பேர் பலி


தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 51 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவானிலுள்ள கோசியுங்கிலிருந்து மாகுங் பகுதிக்கு .டி.ஆர்.-72 ரக பயணிகள் விமானம் ஒன்று 58 பயணிகளுடன் இன்று மாலை 5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது. 4 மணிக்கே புறப்பட வேண்டிய அந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம் சென்றடைய வேண்டிய மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை. எனவே, விமான அதிகாரிகள் 7.06 மணி வரை காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு கிடைத்த தகவலில், அந்த விமானம் பெங்கு தீவிலுள்ள ஹூஷி குடியிருப்பு பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதில், 2 வீடுகளும் சேதமடைந்து தீப்பிடித்தன.
முதற்கட்ட விசாரணையில், விமானம் பெங்கு தீவிற்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது கடுமையான மழையும், மோசமான காற்றும் வீசியதால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இதில் 51 பேர் பலியாகியுள்தாகவும், 7 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள 2-வது மிகப்பெரிய விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தைவானில் அவசரமாக விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட பயங்கர விபத்தில் 47  பேர் பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.
விமானம்விழுந்த இடத்தில் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்., அப்போது 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை தைவான் சென்ட்ரல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தைவான் விமானபடை அதிகாரிகள் கூறுகையில். இன்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளான விமானம் ட்ரான்ஏசியா ஏர்வேய்ஸ்க்கு சொந்தமானது. இதில் 54 பேர் பயணித்தனர். விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது திடீரென விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top