தொடர்ந்து விபத்து

பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்?

மலேசிய ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான 2 விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள் சிக்கியுள்ள நிலையில் நன்மதிப்பை அதிகரிக்கும் வகையில் பெயரை மாற்றும் திட்டத்திற்கு  மலேசியன் ஏர்லைன்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்எம்.எச்.17, கடந்த 17 ஆம் திகதி உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். சம்பவ இடம், ரஷ்ய எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சம்பவம், உலகமெங்கும் அதிர்வலைகளையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், தேடும்பணிகள் நடைபெற்றன. இரண்டு பெரும் விபத்துக்களால் மலேசியா ஏர்லைன்ஸ் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மோசமாகியுள்ள நன்மதிப்பை அதிகரிக்கும் வகையில் பெயரை மாற்றும் திட்டத்திற்கு  மலேசியன் ஏர்லைன்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் மலேசியா அரசால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் மலேசியன் ஏர்லைன்ஸ் பெயர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top