சிரியாவில்
ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலில் 85 வீரர்கள் பலி
சிரியாவில்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் நடத்திய
தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள்
85 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து,
அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின்
இயக்குனர் ராமி
அப்துல் ரஹ்மான்
கூறியிருப்பதாவது:
சிரியாவில்
உள்ள ராக்கா
மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மீது வெள்ளிக்கிழமை
இரவு தாக்குதல்
நடத்தி, அவர்களின்
கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை போராளிகள் கைப்பற்றினர்.
எனினும், வான்வழித்
தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் முன்னேறிச் செல்லவில்லை.
இந்நிலையில்,
போராளிகளின் தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்புப் படையினர்
நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில்
தஞ்சமடைந்தனர்.இந்தத் தாக்குதலில் 85 வீரர்களை போராளிகள்
சுட்டுக் கொன்றனர்.
பாதுகாப்புப்
படை வீரர்கள்
சிலரின் தலையைத்
துண்டித்த போராளிகள்,
அவற்றை ராக்கா
நகரில் பொது
இடத்தில் பார்வைக்கு
வைத்தனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
, பாதுகாப்புப்
படையினர் 200 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை
என்று ராமி
அப்துல் ரஹ்மான்
மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே,
சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் போராளிகள்,
போர்க்குற்ற விசாரணையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று
அந்நாட்டுக்கான ஐ.நா. விசாரணை ஆணையம்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment