உலகில்
220 கோடி பேர் ஏழ்மை நிலையில் வசித்து வருகின்றனர்
ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கையில் தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்ட அறிக்கை ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று வெளியிடப்பட்டது. இதில், 220 கோடி பேர் ஏழ்மை அல்லது ஏழ்மைக்கு அருகில் என்ற நிலையில் வசித்து வருகின்றனர். இதற்கு நிதி நெருக்கடி, இயற்கை பேரிழப்புகள், அதிகரித்து வரும் உணவு விலைகள் மற்றும் வன்முறைகள் ஆகியவை பிரச்சனைகளாக அமைந்துள்ளன என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் வறுமை குறைந்து வந்தாலும், சமத்துவமற்ற நிலை அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆபத்தான அச்சுறுத்தலாக விளங்குகிறது. வளர்ந்து வரும் மாநிலங்களில் 150 கோடி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 80 கோடி பேர் அதன் முனை பகுதியில் உள்ளனர்.
வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது என்பது பூஜ்ய நிலை என்பதுடன் இல்லாமல் அதை அந்த நிலையிலேயே தொடர்ந்து வைத்திருப்பது என்பதுவும் ஆகும் என்று மனித மேம்பாட்டு அறிக்கை 2014 தெரிவித்துள்ளது. இயற்கை பேரிழப்புகள், பருவநிலை மாற்றம் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
வருங்காலத்திற்கான முன்னேற்றம் குறித்த கொள்கைகளில் அச்சுறுத்தல்களை குறைத்தல் என்பது மட்டுமே வளர்ச்சி நிலையானது மற்றும் தக்க வைக்க கூடியது என்பதனை உறுதி செய்யும் ஒரே வழியாகும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் தலைவர் ஹெலன் கிளார்க் கூறும்போது, வருடாந்திர அறிக்கை முதன்முறையாக அச்சுறுத்தல் மற்றும் தீர்வு ஆகியவற்றை மனித மேம்பாட்டு பார்வையுடன் உற்று நோக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். சுமார் 120 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு குறைவான நிதியில் உயிர் வாழ்கிறார்கள் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏழை, பெண்கள், சிறுபான்மையோர் (இனம், மொழி, மதம், இடம் பெயர்வு அல்லது பாலினம்), பூர்வ குடிமக்கள் அல்லது உள்ளடங்கிய பகுதியில் வாழ்பவர்கள் அல்லது உடல் குறைபாடுடன் வாழ்பவர்கள் மற்றும் இயற்கையில் வளம் குறைவாக உள்ள நாடுகள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் அதிக தடைகளை சந்திக்கின்றனர் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment