போர் நிறுத்த
பேச்சுவார்த்தை நடத்த
ஜான் கெர்ரி
இஸ்ரேலுக்கு விரைவு
இஸ்ரேல்-காஸா விவகாரம்
குறித்து பேச்சுவார்த்தை
நடத்த அமெரிக்க
வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி இன்று
இஸ்ரேலுக்கு சென்றடைந்தார் என அறிவிக்கப்படுகின்றது.
காசாவில்
15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் வான்வழி
மற்றும் தரைவழி
தாக்குதலில் இதுவரை 650 அப்பாவி பாலஸ்தீனியர்களும், 39 இஸ்ரேலியத்தவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
இஸ்ரேல் மற்றும்
காஸா இடையே
போர் நிறுத்த
ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான
பேச்சுவார்த்தையை நடத்த இன்று இஸ்ரேலுக்கு அமெரிக்க
வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி சென்றுள்ளார்.
இந்த
பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாஹூ,
பாலஸ்தீனிய பிரதமர் மகமூத் அப்பாஸ் மற்றும்
ஐ.நா.
பொதுச் செயலாளர்
பான்-கீ-மூன் ஆகியோர்
கலந்துகொள்கின்றனர்.
0 comments:
Post a Comment