ஹமாஸ் இயக்கத்தின்
தலைவர் வீடு மீது
ஏவுகணை வீச்சு
காஸா முனையில் போர்
முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இரு தரப்பினரும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி
உள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
காஸா முனை மீது நீண்ட கால தாக்குதல்
நடத்துவதற்கு தனது நாடு தயாராக வேண்டும்
என்று இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின்
நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில்
அங்கு போர்
முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இரு
தரப்பினரும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஸா முனையில்
உள்ள ஹமாஸ்
போராட்ட இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில்
ஹனியே வீட்டின்
மீது இஸ்ரேல்
அதிகாலையில் ஏவுகணை வீசியது. வீட்டுக்கு சேதம்
ஏற்பட்ட போதிலும்
உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள்
இல்லை. இதற்கிடையே
இது குறித்து
ஹனியேவின் மகன்
தனது பேஸ்புக்
இணைய தளத்தில்
குண்டு வீச்சின்போது
யாரும் வீட்டில்
இல்லை என
குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு இணையதளம்
செய்தி வெளியிட்டுள்ளது.
காஸாமுனையில்
புரேய்ஜ் அகதிகள்
முகாமில் உள்ள
ஒரு வீட்டின்மீது
இஸ்ரேல் நடத்திய
தாக்குதலில் 11 பேர் பலியாயினர். ஹமாஸ் இயக்கத்தினரின்
அல் அக்சா
டி.வி.,
அல் அக்சா
வானொலி நிலையங்களும்
தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதியம் நிலவரப்படி இந்தப்
போரில் கொல்லப்பட்ட
பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1178 ஆகவும், காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும்
அல்-ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரவேலர்களின் எண்ணிக்கை 56 ஆக
உயர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment