இஸ்ரேலின்
தொடர் தாக்குதல்:
ஷஹிதானவர்களின்
எண்ணிக்கை 797ஆனது
சர்வதேச
நாடுகளின் நெருக்குதலுக்கு
பணியாமல் பாலஸ்தீனத்தின்
காஸா பகுதியில்
இஸ்ரேல் இராணுவம்
வியாழக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்தது.
காஸாவில்
குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த தென்கிழக்குப் பகுதியில்,
இஸ்ரேல் இராணுவம்
விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி இந்த
தாக்குதலை நடத்தியது.
இதில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 6 பேர்
கொல்லப்பட்டனர்.
475 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 2,644 வீடுகள் பாதியளவு
சேதமடைந்தன. 46 பாடசாலைகள், 56 மசூதிகள், 7
மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
காஸா
பகுதியில் கடந்த
17 நாள்களாக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும்
தாக்குதலில் இதுவரை 797 பேர் கொல்லப்பட்டனர் என பிபிஸி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை 800 யும் தாண்டியுள்ளதாக அல்-ஜஸீரா செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள்
சிறுவர்களும் பெண்களும் அடங்கிய பொதுமக்களாவர்.
மேலும் இந்த
சண்டையில் 33 இஸ்ரேல் இராணுவத்தினரும், அந்நாட்டைச் சேர்ந்த
2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும்
தெரிவித்தார்.
முன்னதாக
காஸா மீதான
இஸ்ரேலின் தாக்குதல்
குறித்து சர்வதேச
விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று
ஐ.நா.
மனித உரிமைகள்
கவுன்சிலில் புதன்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு
ஐ.நா.சபையில் உறுப்பு
நாடுகளாக உள்ள
இந்தியா உள்ளிட்ட
29 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின்
நட்பு நாடான
அமெரிக்கா மட்டும்
எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
17 நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தன.
இஸ்ரேல்
மற்றும் ஹமாஸ்
போராளிகளிடையே மோதல் நிலவி வரும் சூழ்நிலையில்,
பாதுகாப்பு கருதி இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும்
தங்களது விமானங்களை,
ஐரோப்பிய விமானப்
போக்குவரத்து நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
ஜெர்மனி
நாட்டைச் சேர்ந்த
லுஃப்தான்சா, ஏர் பெர்லின் ஆகிய விமானப்
போக்குவரத்து நிறுவனங்கள், இஸ்ரேல் தலைநகர் டெல்-அவிவ் செல்லும்
தங்களது அனைத்து
விமானங்களையும் ரத்து செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளன.
ஹமாஸ்
போராளிகள் செவ்வாய்க்கிழமை
ஏவிய ஏவுகணை
ஒன்று, டெல்-அவிவில் உள்ள
பென் குரியன்
சர்வதேச விமான
நிலையத்துக்கு அருகில் விழுந்ததையடுத்து இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இரண்டாவது
பெரிய விமானப்
போக்குவரத்து நிறுவனமான ஏர் பெர்லின் குழுமமும்,
"டெல் அவிவ் நகரில் நிலவும் சூழலைக்
கருத்தில் கொண்டு,
அங்கு செல்லும்
அனைத்து விமானங்களும்
வெள்ளிக்கிழமை மதியம்வரை ரத்து செய்யப்படுகின்றன' என அறிவித்துள்ளது.
அதைப்
போலவே, பிரெஞ்சு
ஏர்லைன்ஸ் நிறுவனமும்,
டெல் அவிவ்
செல்லும் விமானங்கள்
அனைத்தும் ரத்து
செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
துருக்கி
நாட்டின் "துர்க்கிஷ் ஏர்லைன்ஸ்' விமானங்களும் வியாழக்கிழமை
ரத்து செய்யப்பட்டன.
எனினும்,
இஸ்ரேல் செல்லும்
விமானங்களை ரத்து செய்யும் எண்ணமில்லை எனவும்,
திட்டமிட்டபடி அனைத்து விமானங்களும் இயக்கப்படும் எனவும்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
"தற்போதைய சூழலில், டெல்-அவிவ்
நகருக்கு விமானங்களை
இயக்க வேண்டாம்'
என ஐரோப்பிய
விமானப் போக்குவரத்து
பாதுகாப்பு அமைப்பு (ஈஏஎஸ்ஏ) விடுத்திருந்த எச்சரிக்கையைத்
தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள்
அந்நகருக்கான தங்கள் சேவையை தாற்காலிகமாக நிறுத்திக்
கொண்டுள்ளன.
இஸ்ல்
விமர்சனம்: இதற்கிடையே, தங்கள் நாட்டுக்கு வரும்
விமானங்களை ரத்து செய்திருப்பதன் மூலம், ஐரோப்பிய
நாடுகள் பயங்கரவாதத்துக்கு
அடிபணிந்துவிட்டதாக இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
பென்
குரியன் விமான
நிலையத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வரும்
விமானங்களை ரத்து செய்வது தேவையற்ற செயல்
எனவும் இஸ்ரேல்
போக்குவரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே விமானச் சேவைகள் ரத்தாவது தங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி என ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஒருபுறம் இஸ்ரேல் செல்லும் விமானங்களை ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள் ரத்து செய்து வரும் நிலையில், மற்றொருபுறம் அமெரிக்க விமானங்கள் இஸ்ரேல் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நீக்கியுள்ளது.
இத்தடையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, பயணக் கட்டணம் திரும்ப செலுத்தப்படும்; அல்லது அவர்களது முன்பதிவுத் திகதியில் மாற்றம் செய்து தரப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment