அல்ஜீரிய விமானம்
விழுந்து நொறுங்கியது
விமானி உட்பட
116 பேர் உயிரிழப்பு
அல்ஜீரிய
விமானம் விழுந்து
நொறுங்கி விமானி
உட்பட 116 பேர்
உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட
விமானம் நைஜரில்
விழுந்து நொறுங்கியது.
விமானம் நொறுங்கியதில்
விமானிகள் 2 பேர், ஊழியர் 4 பேர், பயணிகள்
110 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில்
இருந்து
புறப்பட்டவுடன் விமான தொடர்பு
துண்டிக்கப்பட்டது.
இது
இந்த மாதத்தில்
நடக்கும் 2வது
பெரிய உயிரிழப்பு
சம்பவம் ஆகும். நெதர்லாந்து
தலைநகரில் இருந்து
சென்ற மலேசிய
விமானம் உக்ரைன்
எல்லையில் கடந்த
17ஆம் திகதி
சுட்டு வீழ்த்தப்பட்டதில்
298 பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவுக்கு
சொந்தமான மற்றொரு
விமானம் தலைநகர்
கோலாலம்பூரில் இருந்து பில்ஜிங் சென்ற போது
மார்ச் 8 ஆம்
திகதி மாயமானதும்
குறிப்பிடத்தக்கது.
மலேசிய
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் அல்ஜீரியாவை சேர்ந்த
மற்றொரு விமானம்
திடீரென விபத்துக்குள்ளானது
உலகம் முழுவதும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment