இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்
130 பாலஸ்தீனர்கள்
ஸஹீதானார்கள்
பாலஸ்தீனத்தின்
காசா நகர்
மீதான போர்
தாக்குதலை 12 மணி நேரத்துக்கு நிறுத்த இஸ்ரேல்
ஒப்புக்கொண்டது. எனினும், ஹமாஸ் போராளிகள் இதை
ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 130 அப்பாவிகள்
ஸஹீனார்கள்.பாலஸ்தீனிய பகுதியை ஆக்கிரமிக்க அந்நாட்டின்
மீது இஸ்ரேல்
போர் தொடுத்து
வருகிறது. கடந்த20
நாட்களாக நடைபெறும்
தாக்குதலில் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பலர்
கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில்
2 இஸ்ரேலிய மாணவர்கள் உட்பட 46 இராணுவ வீரர்கள் பலியானார்கள்.
உலக நாடுகள்
கண்டித்தும் இஸ்ரேல் இராணுவம் ராக்கெட் ஏவுகணை
தாக்குதலையும் தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டது.
கடந்த
8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தாக்குதலில்
இதுவரை 1060 பாலஸ்தீனிய அப்பாவி
பொதுமக்கள் மக்கள் பலியானார்கள். மேலும் 6 ஆயிரம்
பேர் படுகாயம்
அடைந்தனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து வேறி இடங்களுக்கு சென்றுள்ளனர்.இதைத்
தொடர்ந்து அமெரிக்க
வெளியுறவு துறை
செயலாளர் ஜான்
கெர்ரி இரு
தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அமெரிக்காவின்
சமாதான பேச்சுவார்த்தையை
ஏற்றுக்கொண்டு, நேற்று 7 மணி நேர போர்நிறுத்தத்துக்கு
இஸ்ரேல் இராணுவம்
ஒப்புக்கொண்டது. பின்னர் பல்வேறு நாடுகளின் வேண்டுகோளுக்கு
இணங்க, போர்நிறுத்தம்
12 மணி நேரமாக
நீட்டிக்கப்பட்டது. இஸ்ரேலின் 12 மணி
நேர போர்
நிறுத்தத்துக்கு ஹமாஸ் குழுக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பல்வேறு
நகரங்கள் மீது
நேற்று மாலை
ஹமாஸ் போராளிகள்
5 ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில்
2 ராக்கெட் குண்டுகள் டெல் அவிவ் நகரில்
விழுந்து வெடித்து
சிதறியது. இஸ்ரேல்
இராணுவமும் நேற்றிரவு பதிலடி ராக்கெட் தாக்குதல்
நடத்தியது.இஸ்ரேல்
இராணுவத்தின் ராக்கெட் தாக்குதலில் காசா நகரின்
வடக்கே பெயத்
ஹனூன் உட்பட
பல்வேறு நகரங்களில்
கட்டிட இடிபாடுகளுக்குள்
சிக்கியிருந்த 130 உடல்கள் மீட்கப்பட்டன.
தெற்கு காசா
நகரில் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து
விழுந்தன. அந்நகரங்களில்
இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி
எல்லை பகுதியில்
தஞ்சம் புகுந்தனர்
என்று பாலஸ்தீனிய
மனித உரிமை
குழுக்களும் பிராந்திய அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment