இஸ்ரேல் -
ஹமாஸ் இடையே
நிபந்தனையற்ற போர் நிறுத்தம்
ஐ.நா தீர்மானம்
இஸ்ரேல்
- ஹமாஸ் இடையே நிபந்தனையற்ற போர்
நிறுத்தம் அவசியம்
என்று ஐ.நா பாதுகாப்பு
சபை தீர்மானம்
நிறைவேறியுள்ளது. ரமழான் பெருநாளின் போது சண்டை
நிறுத்தத்தை கருத்தில் கொண்டு கூடிய ஐ.நா பாதுகாப்பு
சபை இரு
தரப்பையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் 15 பேரும் இந்த தீர்மானத்திற்க்கு ஒப்புதல் அளித்தனர். இதனிடையே ரமழான்
பெருநாளைக்கொண்டாட ஏற்பாடுகள் களையிழந்து
காணப்பட்டதாக ஜெருசலேம் நகரில் வசிக்கும் மக்கள்
தெரிவித்தனர். நேற்று 24 மணி நேர போர்
நிறுத்தத்தை அறிவித்திருந்த ஹமாஸ் போராளிகள் அதன்
பின்னரும் இஸ்ரேல்
மீது ராக்கெட்
குண்டுகளை வீசி
தாக்குதல் நடத்தியதாக
புகார் எழுந்துள்ளது.
இதற்கு இஸ்ரேல்
பதிலடி கொடுத்து
வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போர் நிறுத்தம்
இருந்தாலும் இரு தரப்பும் அவ்வப்போது மோதி
கொள்ளவதாக தகவல்
வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக நடந்து
வரும் போரில்
பலஸ்தீனர்கள் 1031 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்
தரப்பில் 43 இராணுவ வீரர்களும் அப்பாவி
மக்கள் மூன்று
பெரும் பலியாகியுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ்
மோதலை முடிவுக்கு
கொண்டுவர அமெரிக்கா
தீவிர முயற்சி
எடுத்தது. அமெரிக்க
அதிபர் ஒபாமாவும்
அப்பாவி மக்கள்
கொள்ளப்படுவது குறித்து தனது கவலையை இஸ்ரேல்
நாட்டிற்கு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி
வெளியிட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு
வெளியுறவு துறை
அமைச்சர் ஜான்
கேரி தீவிர
முயற்சி எடுத்தார்.
0 comments:
Post a Comment