ஈராக்கில்
தற்கொலைப்படை தாக்குதலில்
9 பொலிஸ் அதிகாரிகள்
உட்பட 23 பேர் பலி
ஈராக்கில்
தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
சன்னி பிரிவைச்
சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
ஷியா அரசுக்கு
எதிராக பல்வேறு
தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மொசூல்
நகரை கைப்பற்றியதோடு,
தொடர்ந்து தாக்குதல்
நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் காதிமியா மாவட்டத்தில் உள்ள பொலிஸ்
சோதனைச்சாவடி மீது தற்கொலைப்படை போராளிகள் காரை
மோதி வெடிக்கச்செய்தனர்.
இந்த தாக்குதலில்
9 பொலிஸ் அதிகாரிகள்
உட்பட 23 பேர்
பலியானார்கள். ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்
பகுதியில் நடந்த
இந்த தாக்குதலுக்கு
உடனடியாக எந்த
தீவிரவாத அமைப்பும்
பொறுப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையே பலூஜா மாவட்டத்தில் இராணுவம் நடத்திய
வான்வெளி தாக்குதலில்
பெண்கள், குழந்தைகள்
உட்பட 19 பேர்
கொல்லப்பட்டதாகவும், 328 பேர் காயம்
அடைந்து இருப்பதாகவும்
ஈராக் சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment