அமெரிக்காவை மிஞ்சிய .நா சபையின் இஸ்ரேல் மீதான
கண்டனப் பிரேரணையின் பின்னனி எதுவாக இருக்கலாம்..??

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

பொதுவாக அமெரிக்காவின் மகுடிக்கு படமெடுத்தாடும் .நா சபை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலிற்கெதிராக கண்டன பிரேரணையை நிறைவேற்றியதுமாத்திரமல்லாது எச்சரிச்சை விடுத்துள்ளது. இது கனவா..? நினைவா..?
எது எவ்வாறு இருப்பினும் .நா சபையினதோ அல்லது அமெரிக்காவினதோ செயற்பாடுகள் ஒரு போதும் முஸ்லிம்களிற்கு சாதகமாக அமையாது என்பது வெளிப்படை உண்மை.
ஹமாஸ் வேண்டாம் என்க இஸ்ரேலோ சமாதானம் அவசியம் என்ற பாணியில் தற்போது நடை பயின்று கொண்டிருக்கிறது.
அப்படியான நிலையில் .நா சபை என்றும் இல்லாதது போன்று சமாதான பேச்சு வார்த்தை நடாத்த அக்கரை காட்டுவது இஸ்ரேலைக் காப்பாற்ற என்பது வெளிப்படை உண்மை.
தற்கால நிலைமையில் காஸாவை விட்டு இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் பெறுவதே இஸ்ரேலுக்கு உசிதமானதாகும். எனினும்,தான் காஸாவை விட்டு வெளியேற ஏதாவது ஒரு காரணத்தை முன்வைக்க வேண்டும்.காரணம் ஏதேனும் முன் வைக்கப்படாத பட்சத்தில் இஸ்ரேல் அரசானது உலக நாடுகள் மத்தியில் பெரும் நகைப்பிற்குரியதாக மாற்றப்படுவது மாத்திரமன்றி இஸ்ரேலின் எதிர்கால அரசியல்,எதிர்காலப் போக்கு போன்று போன்றவற்றில் இந் நிகழ்வு பாரிய செல்வாக்கைச் செலுத்தும்.

பலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற இஸ்ரேலைக் கண்டிக்கும் போர்வையில் .நா சபை போன்ற உலக நாடுகள் கண்டித்து இஸ்ரேலானது .நா சபையின் அழுத்தம்,உலக நாடுகளின் அழுத்தத்திற்கிணங்க வாபஸ் வாங்கியதாக கூறவதற்கான காரணிகளில் ஒன்றாகவே .நா சபையின் கண்டனப் பிரேரணையை பார்க்க முடிகிறது.
அப்படியானால் அமெரிக்கா எதிர்ப்பதனால் கிடைக்கப் போகும் நன்மை தான் என்ன?
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி .நா பிரேரணையை நிறைவேற்றும் போது அது பலஸ்தீன மக்களின் நன்மைக்கே என்ற முத்திரை குற்றப்பட்டு உலக முஸ்லிம் நாடுகள் உட்பட பல நாடுகளை திசை திருப்புதலுக்கான மறைமுக உத்தியாகவே இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
அமெரிக்காவின் எதிர்ப்பினையும் மீறி .நா சபையில் பிரேரணை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
ஆனால்,இப் பிரேரணையோ எளிதாக நிறைவேற்றப்பட்டிருப்பதே இங்கே சிந்திக்க வேண்டிய ஒரூ விடயம்.
இப் பிரேரணையை எதிர்க்க அமெரிக்கா கரிசனை கொண்டிருக்குமாக இருந்தால் தன் அணிக்கு வலு சேர்க்க பல்வேறு இராஜ தந்திர முயற்சிகளை செய்திருக்கும் ஆனால் அவைகள் எதையும் அமெரிக்கா செய்ததாக தெரியவில்லை என்பதே அமெரிக்காவின் உள் நோக்கத்தை சுட்டி நிற்கிறது.

இப் பிரேரணை வெற்றி பெற வேண்டும் என்ற உள் காய் நகர்த்தல் இருந்தாலும் இச் சர்ந்தப்பத்தில் அமெரிக்க அரசானது தனது வளர்ப்புக்குழந்தையை எதிர்ப்பது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகிவிடும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top