ஐ.நா. முகாம்
மீது இஸ்ரேல் குண்டு வீச்சு
90 பாலஸ்தீனர்கள்
ஸஹீதானார்கள்
கடந்த 23 நாட்களாக நிகழ்ந்து
வரும் மோதலில் ஸஹீதான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,361ஆக உயர்ந்துள்ளது.
ஐ.நா. முகாம்
உட்பட காஸாவின்
பல பகுதிகளில்
இஸ்ரேல் இராணுவத்தினர்
புதன்கிழமை நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் 90 பாலஸ்தீனர்கள் ஸஹீதாக்கப்பட்டனர்.
260 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து
இஸ்ரேல்-ஹமாஸ்
இடையே கடந்த
23 நாட்களாக நிகழ்ந்து வரும் மோதலில் ஸஹீதான
பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,361ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை 7,350ஆக அதிகரித்துள்ளது.
இது
குறித்து பாலஸ்தீன
சுகாதாரத் துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இஸ்ரேல்
பீரங்கிப் படை
புதன்கிழமை அதிகாலையில் கடுமையான தாக்குதலைத் தொடங்கியது.
வடக்கு
காஸாவின் ஜெபாலியா
பகுதியில் ஐ.நா. நடத்தி
வரும் பாடசாலையில்
அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல்
இராணுவத்தினர் குண்டுகளை வீசியதில் 20 பேர் உயிரிழந்தனர்,
90 பேர் காயமடைந்தனர்
என்று அந்த
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கான்
யூனிஸ் பகுதியில்
இராணுவத்தினர் நிகழ்த்திய குண்டு வீச்சில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதே நகரில்
உள்ள நெரிசல்
மிகுந்த கடை
வீதியில் வீசப்பட்ட
குண்டுவீச்சில் 15 பேர் பலியானார்கள்.
150 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில்,
பி.பி.சி. தொலைக்காட்சிக்கு
ஐ.நா.
மறுவாழ்வு மையத்தின்
பிரதிநிதி பாப்
டர்னர் அளித்த
பேட்டியில், ""ஜெபாலியாவில் உள்ள
ஐ.நா.
அகதிகள் முகாமில்
எவ்வித முன்னெச்சரிக்கை
அறிவிப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது''
என்றார்.
போர்
நிறுத்தத்தை 72 மணி நேரமாக நீட்டிக்கும்படி பாலஸ்தீன
அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை
ஹமாஸ் போராளிகள்
செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில், "ஹமாஸ்
போராளிகளுடனான சண்டையில் இஸ்ரேல் நாட்டு வீரர்கள்
10 பேரும், பொதுமக்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
கடந்த 8ஆம்
திகதியில் இருந்து
இதுவரை 56 இஸ்ரேல்
வீரர்கள் உயிரிழந்துள்ளனர்'
என்று இஸ்ரேல்
இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,
காஸா மீது
இஸ்ரேல் நடத்தி
வரும் தாக்குதலால்
2,15,000 பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து
அகதிகள் முகாமில்
தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த
நிலையில், இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு கூறுகையில்,
""இஸ்ரேலுக்குள் ஊடுருவுவதற்காக ஹமாஸ்
போராளிகள் அமைத்துள்ள
சுரங்கப்பாதைகளை அழிக்காமல் எங்கள் இராணுவ நடவடிக்கை
முடிவுக்கு வராது'' என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment