இஸ்ரேல் விமான நிலையம் மீது 3 ராக்கெட் குண்டுகளை வீசினோம் 

ஹமாஸ் இயக்கம் தெரிவிப்பு

இஸ்ரேல் டெல் அவிவ் விமான நிலையம் மீது 3 ராக்கெட் குண்டுகளை வீசினோம் என்று ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான சண்டை 18 வது நாளை எட்டியது. சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. நேற்று .நா. சபை நடத்தி வருகிற பாடசாலையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்-குதலில் 15 பேர் பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கு .நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொடர்ந்து காஸாமுனைமீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 42 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை ஷஹீதான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 804 ஆனதுஹமாஸ்  போராளிகளை குறி வைத்து நடத்தும் தாக்குதல்கள் முழு வீச்சில் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் விமான நிலையம் மீது 3 ராக்கெட் குண்டுகளை வீசினோம் என்று ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்கள் விமான போக்குவரத்து நிறுத்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான சேவை மீண்டும் தொடங்கியதை அடுத்து குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இரண்டு குண்டுகள் டெல் அவிவ் நகரை இரண்டு குண்டுகள் தாக்கியது என்று இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால் மற்ற தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top