சிவசேனை எம்.பி. மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு
முஸ்லிம் ஊழியரின் நோன்பை கட்டாயமாக முறித்தார்
ரமழான்
நோன்பு நோற்று
வரும் முஸ்லிம் ரயில்வே ஊழியரின்
நோன்பை முறிக்கும்
வகையில் அவரது
வாயில் சப்பாத்தியை
திணித்ததாக சிவசேனை எம்.பி அரவிந்த்
சாவந்த் மீது
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத உணர்வுகளை அவர்
புண்படுத்திவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள்
கண்டனம் செய்ததால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
டில்லி
மராட்டிய பவனில்
எம்.பிக்களுக்கு
சாப்பாடு விநியோகம்
செய்வது வழக்கம்.
இந்நிலையில் சிவசேனை கட்சியை சேர்ந்த அரவிந்த்
சாவந்த் உட்பட
11 எம்.பிக்கள்
சாப்பிடுவதற்காக மராட்டிய பவன் சென்றனர். அங்கு
கேட்டரிங் சூப்பர்வைசரான
அர்ஷத்திடம் சென்ற அரவிந்த் சாவந்த், ஒரு
சப்பாத்தியை பிய்த்து, அர்ஷத்தின் வாய்க்குள் திணிக்க
முற்பட்டார்.
இதுகுறித்து
அர்ஷத் அளித்துள்ள
புகாரில் 'எனது சீருடை சட்டையில் உள்ள பேட்ஜில் அர்ஷத் என்ற பெயர் இருந்தது. இதை பார்த்தால் நான் ஒரு முஸ்லிம் என்பது எம்.பி.க்கு தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், ரமழான் நோன்பு இருக்கும் நேரத்தில் அதை முறிக்கும் வகையில் எனது வாயில் சப்பாத்தியை எம்.பி திணித்தது, மனவேதனையை உண்டாக்கியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் நடந்தபோது
எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரியவந்ததும், லோக்சபாவில்
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனிடையே அரவிந்த் சாவந்த் கூறுகையில், 'அவர்கள் அளித்த உணவு தரமில்லாமல் இருந்தது. எனவேதான், அதுகுறித்து தட்டிக்கேட்க சமையலறைக்கு சென்று சூப்ரவைசரிடம் சண்டை போட்டேன். மத உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிவசேனை கட்சி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment