20வது காமன்வெல்த்
தொடக்க விழா
கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக
ஆரம்பம்
பல்லாயிரக்கணக்கான
ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஸ்காட்லாந்தின்
கிளாஸ்கோ நகரில்
20வது காமன்வெல்த்
விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப விழா தொடங்கியது. தொடக்க
விழாவில் 2000 கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்று வருகின்றன.
கிளாஸ்கோ நகரில்
20வது காமன்வெல்த்
விளையாட்டு போட்டிகள் இன்றுதொடக்கம் ஆகஸ்ட். 3ஆம்
திகதி வரை
நடைபெறுகின்றன. 71 நாடுகளை சேர்ந்த
4,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டிகளின் தொடக்க
விழா கோலாகலமான
கலை நிகழ்ச்சிகளுடன்
தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
போட்டிகளை தொடக்கி
வைத்தார். இங்கிலாந்து
பிரதமர் கேமரூன்,
ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சல்மாண்ட் மற்றும்
இந்திய கிரிக்கெட்
வீரர் சச்சின்
டெண்டுல்கர் உட்பட முக்கிய பிரமுகர்கள் தொடக்க
விழா நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டனர்.
கிராமி விருது
பெற்ற பாப்
பாடகர்கள் ராட்
ஸ்டூவர்ட், சூசன் பாயல், ஆமி மெக்டொனால்ட்
ஆகியோரின் பாடல்கள்
பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
கிளாஸ்கோவில்
உள்ள செல்டிக்
பார்க் மைதானத்தில்
நடந்த இந்த
தொடக்க விழா
நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு
களித்தனர். இந்த மைதானத்தின் தெற்கு பகுதியில்
மிகப்பெரிய எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும்,
11 மீட்டர் உயரமும், 38 டன் எடையும் கொண்ட
இந்த திரையில்
கலை நிகழ்ச்சிகள்
அனைத்தும் நேரடியாக
ஒளிபரப்பப்பட்டன.
0 comments:
Post a Comment