ஐ.நா.எச்சரிக்கையையும்
மீறி தொடரும் தாக்குதல்
1,361 பாலஸ்தீனர்கள்
58 இஸ்ரேலியர்கள் இதுவரை உயிரிழப்பு
பாலஸ்தீனத்தின்
காஸாவில் அகதிகள்
தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் சபை நடத்தி
வரும் பாடசாலைகள்
மற்றும் பொதுமக்கள்
கூடும் சந்தைகளை
இலக்கு வைத்து
இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி
வருகிறது.
இஸ்ரேலின்
இந்த வெறியாட்டத்துக்கு
ஐக்கிய நாடுகள்
சபை கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
காஸாவில்
23வது நாளாக
இஸ்ரேல் தொடர்ந்து
வரும் தாக்குதல்
சம்பவத்தில் இதுவரை
மொத்தம் 1,361 பலஸ்தீனர்கள் ஸஹீதாக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்துள்ளனர்.
இத்தகைய
கோர தாண்டவத்தையும்
நடத்தி விட்டு
காஸாவின் சில
பகுதிகளில் மட்டும் சில மணி நேர
யுத்த நிறுத்தத்தை
இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸாவில்
அகதிகள் தங்கியிருந்த
ஐ.நா.
பாடசாலைகள், சந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேல்
தற்போது கண்மூடித்தனமான
தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் வீடுகளை
விட்டு வெளியேறுமாறு
இஸ்ரேல் விடுத்த
எச்சரிக்கையைத் அடுத்து சுமார் 2 லட்சம் காஸாவாசிகள்
ஐ.நா.
நடத்தும் பாடசாலைகளில்
தங்கியுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
இவர்கள்
மொத்தம் 85 பாடசாலைகள் மற்றும் அகதி முகாம்களில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் முகாம்களும்
பாடசாலைகளும் நிரம்பி வழிகின்றன எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment