இந்திய மராட்டிய
மாநிலம் புனே நிலச்சரிவு;
மண்ணில் புதைந்து கிடந்த
கைக்குழந்தை – தாய் மீட்பு
புனே
நிலச்சரிவு மீட்பு பணியின் போது அதிர்ஷ்டவசமாக
தாயும், அவரது
3 மாத கைக்குழந்தையும்
மீட்கப்பட்டனர்.
.நிலச்சரிவு
மீட்பு பணியின்
போது அதிர்ஷ்டவசமாக
தாயும், அவரது
3 மாத கைக்குழந்தையும்
மீட்கப்பட்டனர். அந்த தாயின் பெயர் பிரமிளா.
இவரது 3 மாத
கைக்குழந்தை ருத்ரா. சேறும், சகதியுமாக கிடந்த
மண் குவியலில்
இருந்து அந்த
கைக்குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதை
அறிந்த மீட்பு
படையினர் அந்த
இடத்தில் கவனமாக
தோண்டினர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பிரமிளாவையும்,
அவரது 3 மாத
கைக்குழந்தையும் பத்திரமாக மீட்டனர். தாயும், குழந்தையும்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.
சிகிச்சை
பெற்று வரும்
பிரமிளா கூறுகையில்,
‘‘நிலச்சரிவு ஏற்பட்டபோது எனது வீட்டில் பாத்திரங்கள்
வைக்க பயன்படுத்தி
வந்த இரும்பு
அலமாரியில் உள்ள இடைவெளி மூலம் எனது
குழந்தை பாதுகாக்கப்பட்டது.
மண்ணில் புதைந்ததும்
நான் உதவிக்காக
கத்திக்கொண்டே இருந்தேன். ஆனால் யாரும் மீட்க
வரவில்லை. இந்த
நிலையில் எனது
குழந்தை ருத்ரா
உரக்க அழுகை
குரல் எழுப்பியதை
மீட்பு படையினர்
கவனித்து மீட்டு
விட்டனர். மண்
குவியலில் சிறிய
கீறல் வழியாக
காற்று வந்ததால்,
அதை சுவாசித்து
எங்களால் உயிர்
பிழைக்க முடிந்தது’’
என்று உருக்கமாக
தெரிவித்தார்.
மராட்டிய
மாநிலம், புனே
மாவட்டம் ஆம்பேகாவ்
தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில்
நேற்று முன்தினம்
அதிகாலை திடீர்
நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக
ஏற்பட்ட இந்த
நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு
மண்ணாக புதைந்து
போயின. அந்தக்
கிராமம், இருந்த
இடம் தெரியாமல்
போய் விட்டது.
நாட்டையே உலுக்கியுள்ள
இந்த இயற்கைப்
பேரிடரில் குறைந்தது
300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர்.
இந்த நிலச்சரிவு
குறித்த தகவல்
அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு
படையினர் விரைந்து
சென்று மீட்புப்
பணிகளை மேற்கொண்டு
வருகிறார்கள். நேற்று 3- வது நாளாக மீட்பு
பணி நடந்து
வருகிறது.
நிலச்சரிவு
ஏற்பட்ட இடத்தில்
சேறும் சகதியுமாக
காட்சியளிக்கிறது. உருண்டு வந்த
பாறைகளும் வீடுகளோடு
புதைந்து கிடக்கின்றன.
மரங்களும் அடியோடு
சாய்ந்து கிடக்கின்றன.
அவ்வப்போது மழையும் குறுக்கிட்டு வருவதால் மீட்பு
பணியில் பெரும்
சிரமம் ஏற்பட்டு
உள்ளது. நிலச்சரிவால்
கிராமமே அழிந்தது.
இதில் பலியானவர்களின்
எண்ணிக்கை 51-ஐ தாண்டியது. மிகப்பெரிய அளவில்
மீட்புப்பணி நடந்து வருகிறது
0 comments:
Post a Comment