இஸ்ரேல்-ஹமாஸ்
இயக்கம் இடையே
12 மணிநேர
போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும்
பலி எண்ணிக்கை
1000 ஆக அதிகரிப்பு
இஸ்ரேலுக்கும்,
காஸா முனையை
ஆட்சி செய்து
வரும் ஹமாஸ்
பொராளிகளுக்கும் இடையேயான சண்டை 19 வது நாளை
எட்டியது. சண்டை
நிறுத்தம் செய்ய
வேண்டும் என்ற
உலக நாடுகளின்
கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுத்து தாக்குதல்களை
தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,
போர் நிறுத்தம்
செய்ய வேண்டும்
என வலியுறுத்தி
ஐ.நா.
அமைப்பு வேண்டுகோள்
விடுத்தது.
இந்த
கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த சூழலில், ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தின்
கோரிக்கையை ஏற்று 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு
இஸ்ரேல்-ஹமாஸ்
இயக்கம் ஒப்புதல்
தெரிவித்துள்ளது. எனினும்,
போர் நிறுத்த
அறிவிப்பு வெளியானாலும்,
தாக்குதல்களில் பலியானோரின் உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு
வருகின்றன.
இதுவரை
85உடல்கள் மீட்கப்பட்டு
உள்ளதால் பலியான
பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1000 ஆக
அதிகரித்துள்ளது. பாலஸ்தீனிய
அவசர சேவை
செய்தி தொடர்பாளர்
அஸ்ரப் அல்-குத்ரா கூறும்போது,
இதுவரை 85 உடல்கள்,
வடக்கு, மத்திய
மற்றும் தெற்கு
காசா, காசா
நகரம் ஆகியவற்றில்
இருந்து கண்டெடுக்கப்பட்டு
மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு
உள்ளன.
இந்த
எண்ணிக்கை அதிகரிக்க
கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். பாலஸ்தீனிய
சுகாதார அமைச்சகம்
காசாவில் இருந்து
இன்று கூறுகையில்,
இதுவரை 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும்
அவர்களில் பெரும்பாலும்
பொதுமக்களாகவே இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. தாக்குதலில்
இரு இஸ்ரேலிய
இராணுவத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால்
இஸ்ரேல் நாட்டை
சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment