தேசிய தமிழ் இலக்கிய ஆய்வு மகாநாடு 2014
Risviu Mohamed Nafeel
தோப்பு
இலக்கியவட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் மேற்படி
நிகழ்வை சிறப்பாக
நடத்தத் தீர்மானித்துள்ளது.
தமிழ், சிங்கள,
இஸ்லாமிய படைப்பிலக்கியங்கள்,
நாட்டரியல், நாட்டுக்கூத்து, நாடகம், திரை, இசை,
சமூகவியல், கலாச்சாரம், தொல் மருத்துவம், தொல்
தற்காப்புக் கலைகள் போன்ற அருங்கலைகள், அண்ணாவிகள்,
இலக்கிய ஆளுமைகள்,
சமூகத்தலைவர்கள் போன்ற பதினைந்துக்கு மேற்பட்ட தலைப்புக்களில்
விரும்பிய கருவூலங்களில்
தங்களது கட்டுரைகளை
சமர்ப்பிக்கலாம். இதற்காக இலங்கை மற்றும் புலங்களில்
வாழும் இலக்கிய
ஆய்வாளர்கள், விமர்சகர்கள், சமூகவியலாளர்கள்
ஆகியோரிடமிருந்து கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரைகள்
பின்வரும் விதிகளுக்கு
அமைவானதாக இருக்க
வலியுறுத்தப் படுகிறது.
கட்டுரையாக்கத்துக்கு
உபயோகிக்கப்பட்ட உசாத்துணை நூல்கள், விபரங்கள் அவை
பயன்படுத்தப்பட்ட கட்டுரைப்பக்கத்தின் அடியில்
குறிக்கப்பட்டிருக்கவேண்டும்.
எழுத்துப்
பிழைகள் நீக்கமுற்று
இருக்க வேண்டும்.
ஏதேனும்
திருத்தங்களுக்காக தங்களுக்கு மின்
அஞ்சலில்திருப்பி அனுப்பப் படும் விடயங்கள் சரி
செய்யப்பட்டு ஆகக்கூடியது ஒரு வாரகாலத்துக்குள் மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
தபாலில்
அனுப்புவதாயின் A4 கடதாசியின் ஒரு
பக்கத்தில் கணணி தமிழ் எழுத்தில்
அச்சிட்டு அதனுடன்
அக்கட்டுரையை ஒரு CD யில் பதிந்து அனுப்புதல்
வேண்டும். அட்டவணைகள்,
வரைபுகள், புகைப்படங்கள்
ஏதேனும் இருப்பின்
அதனை தனித்
தனிப்பக்கத்தில் வரையுமாறு கோரப்படுகிறீர்கள்.
பொருத்தமான
கட்டுரைகள் யாவும் கட்டுரையாளர்களின் பெயருடன் தேசிய
தமிழ் இலக்கிய
விழா 2014 நூலில்
பிரசுரிக்கப்படும்
மேற்படி
மகாநாட்டில் தங்கள் கட்டுரையை சபைக்கு வாசிக்க
தாங்கள் முறைப்படி
அழைக்கப்படுவீர்கள்.
மேலதிக
தவல்கள்
தேவைப்படின் கீழே உள்ள
மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
செப்டம்பர் மாதம்
20 ம் திகதிக்கு
முன்னர் தங்கள்
ஆய்வுகளை, கட்டுரைகளை
நிகழ்ச்சிக் குழு, தேசிய தமிழ் இலக்கிய ஆய்வு மகாநாடு 2014, தோப்பு இலக்கிய வட்டம், 163, நகர மண்டப வீதி, கல்முனை – 07 என்ற முகவரிக்கு அல்லது மின்னஞ்சலில்
thoppuvaddam@gmail.com எனும் முகவரிக்கோ
அனுப்பி வைக்குமாறு
அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.
0 comments:
Post a Comment