காஸாவில் ஐ.நா.
மனித உரிமைகள் ஆணைய
பாடசாலையில்
குண்டுவெடிப்பு 16 பேர் ஷஹிதாகினர்
காஸாவில்
ஐ.நா.
மனித உரிமைகள்
ஆணையம் நடத்தி
வந்த பாடசாலையில்
ராக்கெட் குண்டுகள்
வெடித்துள்ளன. இந்த குண்டு வெடிப்பில் 16 பேர் ஷஹிதாகியுள்ளனர்.
இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ்
போராளிகள் இடையே கடந்த 8 ஆம் திகதி
தொடங்கிய சண்டை
தொடர்ந்து நீடித்து
வருகிறது. இஸ்ரேல்
தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவது
உலகமெங்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக
ஐ.நா.
மனித உரிமை
கவுன்சில், சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காஸாமுனையில் தென்கிழக்கு
பகுதிகளில் நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அந்த பகுதியில்
பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும்
நிலையில், ஹமாஸ்
போராளிகள்
நிலைகளை குறிவைத்து
இஸ்ரேல் இந்த
தாக்குதலை மேற்கொண்டது.
இதில் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
இத்துடன்
சேர்த்து இந்த
சண்டையில் ஷஹிதான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது. இஸ்ரேல்
தரப்பில் 34 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதலில்
காஸாமுனையில் 475 வீடுகள் தரைமட்டமாகின. 46 பாடசாலைகள், 56 மசூதிகள்,
7 ஆஸ்பத்திரிகளும் பலத்த சேதத்தை
அடைந்துள்ளன. 1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பாலஸ்தீனர்கள்
உயிரைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு முகாம்களில்
தஞ்சம் புகுந்துள்ளனர்.
காஸாமுனை மீதான
தாக்குதலை முடிவுக்கு
கொண்டு வரவேண்டும்
என்ற சர்வதேச
நாடுகள் வலியுறுத்தி
வருகிற நிலையிலும்,
அதற்கு இஸ்ரேல்
செவிகொடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காஸாமுனையை நோக்கி எண்ணற்ற பீரங்கிகள் விரைந்து
கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
போர்
நடந்து வரும்
நிலையில் பாலஸ்தீன
மக்கள் ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையம்
நடத்தி வந்த
பாடசாலையில் செயல்பட்ட முகாமிலும் தஞ்சம் அடைந்தனர்.
இஸ்ரேல் இராணுவம்
காஸாவை தொடர்ந்து
நெருங்கிவரும் கடந்த திங்கள் கிழமை அன்று
முகாமில் வாழும்
மக்களை வெளியேறும்படி
இஸ்ரேல் எச்சரிக்கை
விடுத்தது. இதனையடுத்து செவ்வாய்கிழமை ஐ.நா., தனது ஊழியர்களை
வெளியேற்றவும், உணவு வழங்குவதை தடுத்துவிடவும் முடிவு
செய்தது. இந்நிலையில்
காஸாவில் ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையம்
நடந்தி வந்த
பாடசாலையில் ராக்கெட் குண்டுகள் வெடித்துள்ளன. இதில்
16 பேர் பலியாகினர்.
என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
முகாமில்
இருந்த மக்கள்
இஸ்ரேல் வீசிய
ராக்கெட் குண்டுகளே
வெடித்தது என்று
கண்ணீர் மலங்க
கூறியுள்ளனர். ஆனால் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.
5 குண்டுகள் அங்கு வெடித்துள்ளன. இதில் பெண்கள்
குழந்தைகள் என பலர்காயம் அடைந்துள்ளனர். அவர்கள்
அங்குள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment