இந்தியாவுக்கு
தங்கம் கடத்த முயற்சி
மூன்று பெண்கள்
கைது
ஒரு
கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்தை இலங்கையிலிருந்து கடத்துவதற்கு முற்பட்ட
மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சுமார்
86 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்களை இந்தியாவின் பெங்களூருக்கு கொண்டுசெல்ல முற்பட்ட
இரண்டு பெண்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒன்றரை கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய
தங்காபரணங்களை மறைத்து இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையைச்
சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரும், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருமே
இவ்வாறு தங்கம் கடத்த முயற்சித்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளை அடுத்து 75,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட
பின்னர் இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டதுடன், தங்காபரணங்கள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,
வெள்ளி முலாம் பூசப்பட்ட 458 கிராம் நிறையுடைய கைப்பைகளில் பொருத்தப்படும் ஆறு தங்க
கொக்கிகளுடன் பெண்ணொருவர் இன்று காலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 22 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான
தங்க கொக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த பெண்ணிடம் சுங்கப் பிரிவினர்
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment